Tuesday, 23 April 2019

பட்டாம்பூச்சி (அரபு நாடகம்)


النَّثْرُ  - اَلْـفَرَاشَةُ (المَسْرَحِيَّةُ)
பட்டாம்பூச்சி 
(அரபு நாடகம்)



தமிழாக்கம்:

மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416. 
திருநெல்வேலி- மாவட்டம்,  செல்: +919488142358  




கதை மாந்தர்கள்:
சிறிய பட்டாம்பூச்சி,  தாய் பட்டாம்பூச்சி, தேனி, ரோஜாப்பூ, மரம்,  சிட்டுக்குருவி.

கதைக்களம், இடம்:
மேடையின் வலது புறம்:   சிறிய வீட்டின் தோற்றம்.
மேடையின் இடது புறம்:  மரம், செடி, கொடி... உள்ளிட்ட இயற்கை காட்சிகள்,
வானம், வட்டமிடும் சிட்டுக்குறுவியின் தோற்றம்.

திரை விலகி...( நாடகம் துவங்குதல்)

காட்சி-1
(சிறிய பட்டாம்பூச்சியும், தாய் பட்டாம்பூச்சியும் பேசிக்கொள்ளும் காட்சி)

சிறிய பட்டாம்பூச்சி: தனது அம்மாவிடம் சென்று வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்திற்கு சென்று வர அனுமதி கோரியது. வீட்டிலேயே இருந்து சடைவாகிவிட்டது, சற்று இளைப்பார... வெளியே சென்று வருகிறேன் என்று தனது தாயிடம் வேண்டியது.

தாய் பட்டாம்பூச்சி: இறைவா...., இந்த குழந்தைக்கு என்னவாகிவிட்டது, பைத்தியம் பிடித்து விட்டதோ? (காலம் கெட்ட காலத்தில்) எப்படி வெளியே செல்ல அனுமதிக்க முடியும்.? மகளே! நீ ஒரு சிறிய பிள்ளை (பட்டாம் பூச்சி) , எனவேதான் உன் விஷயத்தில் வெளியே அனுமதிக்க நான் பயப்படுகிறேன்.

சிறியபட்டாம்பூச்சி: இதைக்கேட்ட சிறிய பட்டாம் பூச்சி அழுது கொண்டே.....,  உண்மையாக, எனது தாய் எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவளாக இருக்கிறாள்? இந்த நான்கு சுவற்றுக்குள்ளாரையே இருந்து, இருந்து... நான் வெறுத்து விட்டேன்,  தோட்டத்திற்கு சென்று வரவே வேண்டும்.

தாய் பட்டாம்பூச்சி: அதுவெல்லாம் முடியாது, கடுமையாக உன்னை எச்சரிக்கிறேன்,  நீ வெளியே செல்ல என்னால் அனுமதிக்க முடியவே முடியாது.

சிறியபட்டாம்பூச்சி: கவலையுடன் சிறிய பட்டாம் பூச்சி தனது மனதிற்றகுள் கூறிக்கொண்டது, உண்மைதான், நான் வயதில் சிறியவள்தான்,  ஆனாலும் அருகிலுள்ள தோட்டத்தைச் சென்று பார்க்கும் ஆசை கூட எனக்கு வரக்கூடாதா?
இப்படியே கொஞ்சம் நேரம் யோசித்து கொண்டே இருந்த சிறிய பட்டாம் பூச்சி தாய்க்கு தெரியாமல் தோட்டத்திற்கு செல்வது என முடிவெடுத்தது, நான் கோழையல்ல, தைரியசாலி, மற்றும் அழகானவள் என்பதை (வெளியே சென்று வந்து பிறகு) எனது தாய்க்கு தெரியப்படுத்துவேன் என நினைத்துக்கொண்டது.
காட்சி-2
தனது தாய்க்கு தெரியாமல் சிறிய பட்டாம்பூச்சி தோட்டத்திற்கு சென்று விட்டது. அங்கே பட்டாம்பூச்சி இங்கும் அங்கும் பறந்தோடுகிறது. ஆஹா, ஆஹா,  என்ன அழகு! நிச்சயமாக இது  பூமியின் சொர்க்கம்... இங்கே எத்தனை அழகாக பூக்கள்,  ரோஜாக்கள், என மகிழ்ச்சி பொங்க கூறிக்கொள்கிறது.
(அப்போது பட்டாம் பூச்சியும் ரோஜாப்பூவும் உரையாட ஆரம்பித்தன)

பட்டாம்பூச்சி:                 ரோஜாவே உனது பெயரென்ன?

ரோஜாப்பூ:                        எனது பெயர் ரோஜாப்பூ

பட்டாம்பூச்சி:                 சிரித்துக்கொண்டே எனது பெயர் பட்டாம்பூச்சி

ரோஜாப்பூ:                        நான் அழகானவள் என் மணம் கமலக்கூடியது.

பட்டாம்பூச்சி:                 உன்னைவிட நான் ரொம்ப அழகு! எனது உடல் மிருதுவானது,
என்னிடம் முட்கள் கிடையாது.
எனக்கு அலங்காரமான இரு இறக்கைகள் உண்டு. 
அதைக்கொண்டு இங்குமங்கும் என்னால் பறந்திட இயலும்.

ரோஜாப்பூ:                        எனது நறுமனத்தின் மூலம்.. நானும் உன்னை விட மேலானவள்.
மக்களெல்லாம் எனது நறுமனத்தையும் நேசிப்பார்கள்.
என தன்னை இங்கும் அங்கும் அசைத்து கொண்டே கூறியது.

பட்டாம்பூச்சி:                 என் அழகான இரு இறக்கைகளுக்காக,
என்னையும்தான் மக்கள் விரும்புகின்றார்கள்.

ரோஜாப்பூ:                        நான் இல்லாமல் உனக்கு வாழ்க்கையே.. இல்லை.

பட்டாம்பூச்சி:                 பெருமைவேண்டாம் ரோஜப்பூவே! ,
உன்னை பறித்து பூக்கூடையில் போட்டுவிடுவார்கள்.

ரோஜாப்பூ:                        உன்னை நான் எச்சரிக்கின்றேன், என் அருகில் வரவேண்டாம்,
என் முற்களால் உன்னை நான் காயப்படுத்தி விடுவேன்.

பட்டாம்பூச்சி:                 உன்னால் இந்த இடத்தை விட்டு அசையக்கூட முடியாது.
(பிறகு எப்படி என்னை காயப்படுத்துவாய்?)

ரோஜாப்பூ:                        நீ என் எச்சிலைதான் உணவாக சாப்பிடுகிறாய்,
(அப்போது வா.. உன்னை நான் பார்த்துகொள்கிறேன்)
நானில்லையேல்... உனது வாழ்க்கையில்லை.

இப்படிபேசிய ரோஜாப்பூ வின் பேச்சால்.. பட்டாம்பூச்சி கவலைகொண்டு அதை விட்டு விலகிச்சென்று, அருகிலுள்ள மரத்தின் பக்கம் ஒதுங்கியது.
காட்சி -3

(இப்போது பட்டாம் பூச்சியும், மரமும் பேசிக்கொண்டது.)

பட்டாம்பூச்சி:                 மரமே! அந்த ரோஜாப்பூவின் பேச்சை கேட்டாயா? 
அந்த பேச்சு என்னை நோகடித்து விட்டது.

மரம் :                                 அந்த ரோஜாப்பூ சொல்வதில் உண்மை இருக்கு,
நீ அதை நெருங்கினால்..அதனுடைய முற்கள்
உன் இறக்கைகளை காயப்படுத்த தானே செய்யும்.

பட்டாம்பூச்சி:                 நீ உனது அண்டைவீட்டுக்காரனுக்கு ஆதரவாகத்தானே பேசுவாய், 
உன் மேலும் எனக்கு கோபம் தான் வருகிறது.

மரம்:                                    சரி,  நீ நேர்மையானவள்தான்,
உனது தாய் உன்னை பிரிந்த கலக்கத்தில் இருப்பாள்,
அவளிடம் வேறு சொல்லாமல் வீட்டை விட்டு வந்துள்ளாய்.

பட்டாம்பூச்சி:                 உண்மைதான், உங்களால் நான் என்னையே  மறந்து விட்டேன்
என்கூறி அழத்தொடங்கியது.

(இப்படி பட்டாம் பூச்சி அழுது கொண்டே இருக்கும் போது அங்கே ஒரு தேனி வந்தது. அவ்விருவரும் சற்று உரையாடினர்)

தேனி:                                  என் அண்டை வீட்டுக்காரியே, பட்டாம்பூச்சியே,
உனக்கு என்ன நேர்ந்து விட்டது.
ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?

பட்டாம்பூச்சி:                 ரோஜாவின் பேச்சு என்னை கோபமாக்கியது.
எனக்கு கவலைதரும் பேச்சை கேட்கச் செய்துவிட்டது. கடைசியாக
இந்த மரம் கூட தனது நண்பருக்கு ஆதரவாகவே பேசுகிறது.

தேனி:                                  மிருதுவானவளே! கடந்து போனதை விடு,
நீ சிறிய பிள்ளை, சீக்கிரம் உனது தாயிடம்  திரும்பி வா..
இங்கே உனக்கு நிறைய ஆபத்துகள் உள்ளது. ரோஜாப்பூவால் மட்டுமல்ல... பசித்த பறவைகளாலும்,  ஆபத்தான பாம்புகளாலும், உன்னை சாப்பிடத்துடிக்கும்.. சிட்டுக்குருவிகளாலும்,  இங்கே உனக்கு ஆபத்து  உள்ளது. (எனவே சீக்கிரம் வீட்டிற்கு வா!)

தேனியின் பேச்சால் பட்டாம்பூச்சிக்கு பயம் வந்துவிட்டது. அது தனது தனிமையை உணர ஆரம்பித்தது. தாயிடம் சொல்லாமல், அவள் அசந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தது தவறு என உணர ஆரம்பித்தது.
நிறைவுக்காட்சி:

அப்போது மரத்திற்கு மேலிருந்து ஒரு சிட்டுக்குருவி கத்திக்கொண்டு இருந்தது.
(சிட்டுக்குருவியின் சப்தம் பயங்கர அலறலாக  மாறியது.  இப்போது சி்ட்டுக்குருவி பட்டாம்பூச்சி உடன் பேச ஆரம்பித்தது.)

சிட்டுக்குருவி:               அய்யோ என்ன அழகான பட்டாம்பூச்சி?  இங்கே வா... அருகில் வா...
நீ தான் இன்றைக்கு எனக்கு இரவு உணவு.

பட்டாம்பூச்சி:                 ஆனவமும் கர்வமும் கொண்ட சிட்டுக்குருவியே தூரப்போ, என்னை விட்டு விலகி போ. எனக்கூறி பட்டாம்பூச்சி பறந்து சென்றது

சிட்டுக்குருவி:               பட்டாம்பூச்சியை விடாமல் துரத்திச் சென்றது.... இங்கே வா,
இங்கே வா, என்று அழைத்தது.

பட்டாம்பூச்சி :               பயத்துடன் மிக வேகமாக பறந்து சென்று, தன் வீட்டிற்குள் நுழைந்து,
கதவை மூடிக்கொண்டது.  பயத்துடன் நிலைகுலைந்து,  தாயின் சொல்
கேளாமல் வெளியே சென்றதை நினைத்து வருந்தியது.

இனி, தாய் சொல்லை தட்டமாட்டேன் என்றும், தாயின் பேச்சை மதித்து கேட்பது எனவும் முடிவெடுத்தது அந்த சிறிய பட்டாம்பூச்சி.

இனிதே திரை மூடியது.



















No comments:

Post a Comment

Arabic Question

XII std Arabic Public Question March 2023

XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing

Arabic Language