5. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
தமிழாக்கம்:
மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416.
திருநெல்வேலி- மாவட்டம், செல்: +919488142358
மவுலானா அபுல் கலாம் ஆசாத்
கி.பி.1888ல் மக்காவில் பிறந்தார்கள்.
மவுலானா அவர்களுடைய தந்தை பெயர் கைருத்தீன் ஆகும். அவர்கள் ஆரம்பத்தில் டெல்லியில்
தங்கியிருந்தார்கள், பிறகு ஆங்கிலேய ஆதிக்கமும், அநீதியும் இந்தியாவில் தீவிரமாகி, அதிகமாகிய போது...கி.பி.1787ஆம் ஆண்டு மக்காவை
நோக்கி அகதியாக ஹிஜ்ரத் சென்றார்கள் கைருத்தீன்.
அங்கேய சிலபல ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.
அங்கே மக்காவின் மாரக்க மேதை(முஃப்தீ) ஒருவரை
சந்திந்து மார்க்கச் சட்டங்கள் பயின்றுவந்தார்கள், அப்போது அந்த அறிஞருக்கு
(முஃப்திக்கு) கைருத்தீனின் நடவடிக்கை, அறிவுத்திறன் பிடித்துப்போக, தனது சகோதரி மகளை அவருக்கு
திருமணம் முடித்து வைத்தார்கள். அதன்பிறகு கைருத்தீன் தனது மனைவி மற்றும் குழந்தை
(மவ்லானா ஆசாத் அவர்களுடன்) இந்தியா திரும்பி கல்கத்தாவில் தங்கி வசித்து வந்தார்கள்.
கல்விமானாக மவ்லானா ஆசாத்:
மவுலானா அபுல்கலாம் ஆசாத்
பல ஆலிம்பெருமக்களிடமிருந்து குர்ஆனை கற்றறிந்து, பிறகு அரபு, பார்சீ,உர்து போன்ற மொழிகளையும்
கற்று தேறினார்கள். தனது தந்தையிடமிருந்து இஸ்லாமிய மார்க்க அறிவை கற்றுக் கொண்டார்கள்.
சர் சயீத் அஹ்மத் கான்:
சர் சயீத் அஹ்மத் கான் உத்திரபிரதேசம்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஆவார்கள். இந்திய முஸ்லிம்கள் ஆங்கிலம்
படிக்க வேண்டும், அறிவியல் படிக்க வேண்டும்
என்பதில் ஆர்வம் கொண்டு அதற்காக பாடுபட்டவர்கள் சர் சயீத் அஹ்மத் கான். அது பற்றி பல கட்டுரைகளை அவர் எழுதி உள்ளார்கள், அவைகளில் சிலவற்றை படித்த மவுலானா ஆசாத்..,அதன்பால் ஈர்க்கப்பட்டு,
அவரால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள
ஆரம்பித்தார்கள்.
தேசத்தின் சுதந்திர போராட்டம்:
இந்நேரத்தில் இந்தியாவில்
சுதந்திர போர் தீவிரமாகி இருந்தது, அதில் மவ்லானா ஆசாதும் கலந்து
கொண்டார்கள், அப்போது தேச சுதந்திர போராட்டத்தின்
தலைவராக மகாத்மா காந்தி அவர்கள் இருந்தார்கள்,
மவுலானா ஆசாத் அவர்களும்
சுதந்திர போரட்ட களத்தில் ஒரு தலைவராக பிரணமித்தார்கள், பலதடவை ஆங்கிலயே அரசால் சிறையிலடைக்கப்பட்டார்கள், அதுபோது நாடறியும் அரசியல்வாதியாக மாறினார்கள்.
மவ்லானா ஆசாத் ஒரு ஆலிமாகவும், சிறந்த ஆளுமைவாதியாகவும், ஆற்றல்வாதியாகவும், உறுதியானவராகவும், அரசியல்வாதியாகவும், மேதையாகவும், தோழராகவும், திறன் வாய்ந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்கள்.
இந்திய அரசியலில் பிரபல்யமான
அரசியல்வாதியாக திகழ்ந்தார்கள், நாடு சுதந்திரம் பெற மிக முக்கிய
பங்காற்றி செயல்பட்டார்கள். அவருடைய இயற்பெயர் முஹ்யித்தீன் அஹ்மத், எனினும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் என்ற புனைப்பெயரால் அனைவராலும்
அழைக்கப்பட்டார்கள்.
கல்வி அமைச்சராக ஆசாத்:
நாடு சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட்15, கி.பி.1947ஆம் ஆண்டு முதல் கல்வித்துறை
அமைச்சாராக பொறுப்பேற்றுகொண்டார்கள். தன் தேசத்தின் சேவைக்காகவும், தான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காகவும்... தனது வாழ்நாள்
முழுவதையும் அர்பணித்தவர்கள் மவ்லானா அபுல்கலாம் ஆசாத் ஆவர்கள்.
எழுத்தாளராக ஆசாத்:
மவுலானா அபுல்கலாம் ஆசாத்
இஸ்லாமிய மார்க்க அறிவில் திறன் படைத்தவராக திகழ்ந்துவந்தார்கள், அதிகமான புத்தகங்கள் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபல்யமானது
தர்ஜூமானில் குர்ஆன், (முதல் உருது மொழிபெயர்ப்பு
குர்ஆன்) மேற்கானும் தர்ஜூமா நூலில் குர்ஆன் வசனத்திற்கு தகுந்த, தேவையான விளங்கங்களை தந்துள்ளார்கள், மேலும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள், ஹிலால், பலாஃக் எனும் இருவேறு உருது
இதழ்களையும் எழுதி வெளியிட்டு வந்தார்கள்.
மரணம்:
மவுலானா அபுல்கலாம் ஆசாத்
அவர்கள் கி.பி 1957ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள்.
டெல்லி ஜூம்மா மசூதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment