1. ஹஜ்ஜத்துல் விதா
தமிழாக்கம்:
மவுலானா, K. அப்துல் சுக்கூர்,M.A.,B.Ed ஆலிம்,ரியாஜி. கல்லிடைக்குறிச்சி
செல்: 9488142358
முன்னுரை
ஹஜ்ஜத்துல் விதா என்பது
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கு பிறகு செய்த முதலும் கடைசியுமான ஹஜ்ஜாகும்.
அதில் இறுதிப்பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் இஸ்லாமிய மார்க்கம்
மற்றும் நற்குனங்கள் பற்றி நல்லுபதேசம் செய்தார்கள்.
இந்த உரைக்கு பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களை விட்டு மரணத்தால் பிரிந்து சென்றதால்... இதற்கு ஹஜ்ஜத்துல் விதா
இறுதி ஹஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இவ்வுரையில்
மார்க்கத்தின் காரியங்கள் பற்றி கற்று கொடுத்தார்கள். முஹம்மது (ஸல்) ஆகிய நான்
மறைந்த பிறகும் இந்த மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச்சொல்லுங்கள் என்றும்
உபதேசித்தார்கள்.
அவ்வேளையில்
நபித்தோழர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜூடைய காரியங்களான, கல்லெறிதல், தலைமுடி
அகற்றுதல், தொங்கோட்டம் ஓடுதல் போன்ற ஹஜ்ஜூடைய ஒழுங்குகள் குறித்து கேட்டு
தெரிந்து கொண்டார்கள். நபித்தோழர்கள் நபியிடமிருந்து
இலகுவான விசயங்களையே பெற்று கொண்டார்கள். கஷ்டப்படாமல்
இலகுவாகவே செய்யுங்கள். என அவர்களுக்கு கூறினார்கள்.
இறைவாழ்த்து- உரைத்தொடக்கம்
புகழ் அனைத்தும்
இறைவனுக்கே அவனையே புகழ்கிறோம், அவனிடமே உதவியும் தேடுகிறோம், அவனிடமே
பாவமன்னிப்பு கோருகிறோம், அவனிடமே பாவ மீட்சி தவ்பா வேண்டுகிறோம், நமது ஆத்மாவின் கெட்ட
எண்ணங்களிலிருந்தும், நமது செயல்களின்
தீங்கிளிருந்தும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அவன் நேர்வழி காட்டியவரை யாராலும்
வழிகெடுத்திட முடியாது. அவன் வழிதவறவிட்டவருக்கு யாராலும்
நேர்வழி காட்டிடவும் முடியாது.
அல்லாஹ்வைத்தவிர
வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு ஈடு
இனையுமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதராகவும் அடியாராகவும்
இருக்கிறார்கள்.
அல்லாஹ்வை வணங்குவது பற்றியும், அவனை அஞ்சுவது பற்றியும்
உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். இறைப்புகழ்ச்சிக்கு பிறகு...மக்களே.. மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த
ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
மனிதப்புனிதம்
மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக்
கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவர் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக்
கருதுங்கள்.
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!)
நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ்
உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து
விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில்
அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
வட்டி-கொலை
மேலும், இன்று வரையிலான அறியாமைக் கால (அனைத்து) வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது..
எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே
உரியது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு
அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.
அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக்
காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன்.
அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை
செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான்.
ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய்
நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
குர்ஆன்-நபிவழி
மக்களே! முஸ்லிம்கள் அனைவரும்
சகோதரர்கள். நீங்கள் விரும்புகின்றவற்றையே...
மற்றவர்களுக்கு கொடுங்கள்; பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்கள்! உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் வழிமுறையும்
விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
உயர்வு-தாழ்வு இல்லை
மக்களே! அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஆதம் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும்
ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை
விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை
விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.
நான் மார்க்கத்தை உங்களுக்கு
எடுத்துரைத்து விட்டேனா? என நபியவர்கள் கேட்க, மக்கள் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள்
என்றார்கள். நபியவர்கள் “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்.
இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் இதை எடுத்துக் கூறுங்கள்.
உரைச்சுருக்கம்
ஹஜ்ஜத்துல் விதா பேருரையில்
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மார்க்கத்தின் முக்கிய கடமைகள் பற்றியும், முஸ்லிம்
உயிர்களின் கண்ணியத்தை பற்றியும், அவர்களின் பொருளாதார உரிமைகள் பற்றியும்
சுட்டிகாட்டியுள்ளார்கள்.
இந்த உரை, இஸ்லாமிய
மார்க்கத்தின் உறுதியான ஒரு கொள்கையை பற்றி அதாவது, கொலை, தீங்குவிளைவித்தல், அவமதித்தல், பழிவாங்குதல் போன்ற முஸ்லீம்
சகோதரருக்கு எதிராக முஸ்லீம்களின் உரிமை மீறல் எது? என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகள்
நெறிமுறைகள் பாடங்களை தெளிவாக கூறுகிறது.
வட்டி மற்றும் அதைச் சார்ந்த அனைத்தும் தடைச்செய்யப்பட்டுவிட்டதாக இந்த உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி வாங்கி அதில் சாப்பிடுபவருக்கும், அதற்கு சாட்சியாக இருப்பவருக்கும், அது
சார்ந்த எழுத்தாளருக்கும், வட்டியின் அருகில் அல்லது தூரத்தில் இருப்பவருக்கும், தனிப்பட்ட மனிதர் அல்லது ஒரு சமுதாயத்தின் சார்பான வட்டியாக இருந்தாலும்,
அதன் சாபம் எதிர்மறையான விளைவுகளையே கொடுக்கும்.
முஸ்லிம்களே அல்லாஹ்வின்
வேதத்தையும், நபியின் வழிமுறைகளையும் எல்லாநேரங்களிலும்
மற்றும் எல்லா இடங்களிலும் பற்றிக் பிடித்துக்கொள்ளுங்கள். முஸ்லீம்களின் சகோதரத்துவத்தையும்
ஒற்றுமையையும் உறுதிபடுத்துங்கள். முஸ்லிம்களிடையே உள்ள முரண்பாடு மற்றும் மாற்றுச்சிந்தனைகளைவ
விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என இவ்வுரை வலியுறுத்தி எச்சரிக்கிறது.
No comments:
Post a Comment