*தமிழ்நாடு பள்ளிக்கல்வி மேல்நிலை வகுப்பில் அரபு மொழிப் பாடம் பயில அரியதோர் வாய்ப்பு.*
*11 ஆம் வகுப்பில் குரூப் தேர்வு செய்து படிப்பது போல் அரபு மொழிப் பாடத்தையும் தமிழுக்கு பகரமாக தேர்வு செய்யலாம்.*
*புதிதாக தமிழக அரசு அரபு மொழிப்பாடத்திட்ட நூல் தயாரித்து வெளியிட்டுள்ளது.*
*வாருங்கள்...! நமது தலைமுறை சந்ததிகளை தமிழக பள்ளிகளில் அரபு மொழி கற்கச்செய்வோம்.*
*முஸ்லிம் கல்வி நிறுவனங்களே உங்களது மேலான கல்வி நிறுவனத்தில் பத்து பிள்ளைகளையேனும் அரபு மொழி கற்க ஏற்பாடு செய்யுங்கள்.*
*11மற்றும் 12ஆம் வகுப்பில் உங்களது மேலான பள்ளி மாணவர்கள் அரபு மொழிப் பாடத்தில் பொதுத் தேர்வு எழுத ஆவணம் செய்யுஙகள்.*
*நீங்கள் சிறு வகுப்பில் கற்றுக்கொடுக்கும் அரபு பாடநூல்கள் உங்கள் பள்ளியில் மதரஸாவில் நடைபெறும் அரபு பயிற்சி அரசின் கவனத்திற்கு வராது.*
*பள்ளிகளில் பொதுத்தேர்வில் அரபு மொழி எடுத்து எழுதும் போதுதான் இத்தனை நபர்கள் அரபி பயில்கிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு வரும்*
*நமக்கென்ன நாம்தான் பள்ளிவாசல் மதரஸாவில் ஓதுகிறோமே....? பிறகு ஏன் பள்ளியிலும் படிக்கவேண்டும் ? என் நினைத்தால் மேல்நிலை வகுப்பில் அரபு மொழி படிக்க யாரும் இல்லை என அரசு முடிவெடுத்து விடும்.*
*அதை விட கவனம் இதை இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகள்தான் செய்யவேண்டும். பத்து பிள்ளையாவது ஒவ்வொரு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிகளிலும் அரபு மொழி கற்க ஏற்பாடு செய்யுங்கள்.*
செய்வீர்களா?
செய்வீர்களா?
*மாநில அரசு பாடத்திட்டம்*
*CBSE பாடத்திட்டம்*
*IGCSE & ICSE பாடத்திட்டம்*
*என அனைத்து வகை பள்ளிகளிலும் அரபு மொழி கற்கும் வாய்ப்புள்ளது.*
தகவல்:-
மெளலவி.
K. அப்துல் சுக்கூர் ரியாஜி,
*செயற்குழு உறுப்பினர்,*
*தமிழ்நாடு அரபுச் சங்கம்.
சென்னை.*
Cell Number:- 9488142358.
அருமையான வாய்ப்பு.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ! வரவேற்கத்தக்கது ! அப்துல் சுக்கூர் ரியாசி அவர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக! அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக!!ஆமீன் !!!
ReplyDelete