*தமிழகத்தில் அரபு மொழி*
இது இந்திய வரைபடத்தில் தென்பகுதியில் அமைந்துள்ளது.
*அதன் பரப்பளவு 133038 சதுர கி.மீ.* ஆகும். அதன் அண்டை மாநிலமாக மேற்கில் கேரளா, வடக்கில் ஆந்திரா, கர்நாடகம், கிழக்கில் வங்காள விரிகுடா கடல், தெற்கில் இந்திய பெருங்கடல் உள்ளது.
*அரபு மொழியின் வருகை*
அரேபியத்திலிருந்து முஸ்லிம்களின் வருகையால் இந்தியாவிற்குள் அரபு மொழியும் வந்தது.
வணிகம் சார்ந்து அரபியேர்கள் தமிழ்நாட்டை தங்களது சொந்த தேசமாக, என்றென்றைக்கும் தங்களது தங்குமிடமாகவும், *இன்னும் சொல்லப்போனால் தமிழராகவே தங்களை ஆக்கிகொண்டனர்,* தங்களது அறிவால், ஆற்றலால் பலதரபட்ட சேவைகள் இந்த தமிழ்நாட்டிற்கு அரேபியர்களால்.... செய்யப்பட்டுள்ளது.
*கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் முதன்முதலில் முஸ்லிம்கள் வியாபாரம் சார்ந்து தமிழகத்திற்கு வருகை புரிந்தனர் .*
இந்தியாவின் தென்பகுதியான கேரளாவின் மலபார் வழியாக இந்தியாவிற்கு வருகைதந்தனர்.
*மாலிக் பின் தீனார் அவர்களால் கி.பி.629ஆம் ஆண்டு கேரளாவில் சேரமான் பள்ளிவாசல் கட்டப்பட்டது இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்* ஆகும்.
*அரபு தமிழ்*
அரபியர்கள் அல்லிலஸானுல் அர்வீ என்று சொல்லக்கூடிய *அரபுதமிழ் என்ற மொழியை உருவாக்கினார்,* அதில் *எழுத்துக்கள் அரபு வடிவிலும், வாக்கியங்கள் தமிழாகவும் இருக்கும்.*
அரபுதமிழ் தமிழகத்து
முஸ்லிம்களின் முக்கிய பயன்பாட்டு மொழியாக இருந்து வந்தது.
அதிகமான தமிழக உலமாக்கள் *அரபுதமிழில் இலக்கியம், வரலாறு, இஸ்லாமிய மார்க்கச்சட்டம், பற்றிய புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளனர், அதில் பிரபல்யமான எழுத்தாளர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆவார்கள்,* அவர் *மாதிஹூஸ் சிப்தைன் என அழைக்கப்பட்டார்.* அவருடைய சிறந்த புத்தகம் *மாஆனி மார்க்க வழிகாட்டி புத்தகம்* ஆகும்.
*அரேபியர்கள்- தமிழர்கள் உறவு*
தமிழகத்தில் அரேபியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருந்த சகோதரத்துவ நட்பு .... மாமா, சித்தப்பா என்றழைக்கும் அளவு நெருக்கமாகவும்,
வரலாற்று சிறப்பு வாயந்ததாகவும் இருந்தது.
*முகம்மது நபி (ஸல்) அவர்கள் காலந்த்தொட்டே வியாபாரம், கொடுக்கல் வாங்கல், வாழ்க்கை ரீதியாக, வணிக ரீதியாக, வழிபாட்டு ரீதியாக தொன்று தொட்டு தொடர்பு இருந்து வந்துள்ளது.*
இதன்மூலமே இன்றும் இஸ்லாம் இந்த மண்ணில்
*சகோதரத்துவ வாஞ்சையோடு வளர்ந்தோங்கி தழைத்தோங்கி நிற்கிறது.*
*அரபு இலக்கியம்*
அதிகமான தமிழக உலமாக்கள் அரபு மொழியில்...
இலக்கியம், வரலாறு, இஸ்லாமிய மார்க்கச்சட்டம், போன்ற
தங்களது படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளனர், அதில் பிரபல்யமான இலக்கியவாதிகள்...
*மாதிஹூர் ரசூல் என்றழைக்கப்படும், கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சதகத்துல்லாஹ் அப்பா ஆவார்கள்.* அன்னாருக்கு அனேக மாணவர்கள் உண்டு. அதில் *சீதக்காதீ என்பவர் பிரபலம், தமிழக மூத்த உலமாக்களிடத்தில் உயர்ந்த இடம் அன்னாருக்கு உண்டு.* இருவரும் காலத்தால் அழியாத நிரந்தரமாக உயிர்பெற்றிருக்கும் பல்வேறு இலக்கிய புத்தகங்களை, அனேக அரபு கதைகள், கவிதைகளை அரபு மொழியில் எழுதிச் சென்றுள்ளார்கள்.
*அரபுக்கல்லூரிகள்*
அதிகமான அரபுக்கல்லூரிகள், இஸ்லாமிய கல்விக்கூடங்கள், மதரஸாக்கள், தமிழ்நாட்டில் உள்ளது.
அதில் தமிழக அரசின் அரசு அங்கீகாரம் பெற்று பல்கலைக்கழகத்துடன் இனைந்து செயல்படும் மதரஸாக்கள் ஐந்து ஆகும். அவைகள், 1.மதரஸா லதீஃபிய்யா, அதிராம்பட்டினம்.
2.மதரஸா பாகிய்யாத்துஸ் ஸாலிஹாத்,வேலூர்.
3.மதரஸா தாருஸ்ஸலாம், உமராபாத்.
4.ஜமாலிய்யா அரபுக்கல்லூரி, பெரம்பூர், சென்னை.
5.புகாரி ஆலிம் அரபுக்கல்லூரி, வண்டலூர்,சென்னை.
இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்கள், அரபுக்கல்லாரிகள் தமிழகத்தில் *தமிழுடன் கூடிய அரபு மொழிக்கான சேவையை ஆற்றி வருகிறது.*
அதில்குறிப்பிடதகுந்தது
1. *ரியாழுல் ஜினான் அரபிக்கல்லூரி,* திருநெல்வேலி- பேட்டை.
2.மன்பவுல் அன்வார் லால்பேட்டை,
3.மிஸ்பாஹீல் ஹூதா நீடூர்.
தமிழ் கூறும் நல்லுலகில் காலத்தால் அழியாத நன்மறையாம், *திருக்குறளை சமீபத்தில்.... அரபு மொழியில் மொழியாக்கம் செய்து அதற்காக *தமிழக அரசின் உயரிய விருதையும் பெற்ற முனைவர், ஆலிம்பெருமகனார் அ. ஜாஹிர் ஹூசைன் பாகவி அவர்கள் (சென்னை பல்கலைக்கழகம்) தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இனைப்பு பாலமாகவும், நாடறிந்த சிறந்த இலக்கியவாதியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.*
ஆக்கம்:
மெளலானா,
K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி.
கல்லிடைக்குறிச்சி
செல்:
9488142358
No comments:
Post a Comment