النَّثْرُ - اَلتِّجَارَةُ
الرَّابِحَةُ (الْقِصَّةُ)
3. லாபகரமான வியபாரம்
தமிழாக்கம்:
மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416.
திருநெல்வேலி- மாவட்டம்,
செல்: +919488142358
பெருநாள் இரவு வந்தது, அப்போது மனைவி தனது கனவனிடத்தில் பின்வருமாறு கூறினாள், அப்துல்லாஹ்வின்
தந்தையே..! நாளை விடிந்தால் பெருநாள் தினமாகும், அன்டை வீட்டுக்குழந்தைகளைப்
போல் நம் குழந்தைகளும் புத்தாடை அணிய நம்மிடம் ஏதுமில்லை, இந்த இயலாநிலைக்கு உங்களது
வீண்விரயமே காரணமாகும்.
பதிலுக்கு கணவர்...எனதருமை
மனைவியே.. அப்துல்லாஹ்வின் தாயே! நான் எனது
செல்வத்தை நல்வழியிலும், தேவையுடைய மக்களுக்கும்தான்.. செலவு செய்தேன் அது வீண்விரயம் அல்லவே? எனக்கூறினார்.
சரி...,சரி..., அது இருக்கட்டும். உங்களது நண்பர்கள், தூயகுணமுடையவர்கள் யாருக்கேனும் கடிதம்
எழுதி... பண உதவிக்கேளுங்கள், நமது நிலமை மாறியவுடன் இறைவன்
நாடினால் திருப்பி கொடுத்திடலாம் என மனைவி கூறினாள்.
அவருக்கோ இரண்டு நண்பர்கள்
இருந்தனர், ஒருவர் ஹாஷிம், மற்றொருவர் உஸாமா. எனவே இவரும் உதவி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி
தனது பணியாளரிடம் முதல் நண்பர் ஹாஷிமுக்கு கொடுத்து அனுப்பினார்.
பணியாளர் அந்த கடிதத்தை ஹாஷிமிடம்
கொடுத்தார். ஹாஷிம் அந்த கடிதத்தை படித்து விட்டு தனது நண்பனின் நிலையையும், இயலாமையையும், தேவையையும் அறிந்து கொண்டார், உடனே ஹாஷிம் அந்த பணியாளரிடம்
கூறினார், நான் உனது எஜமானனின் நிலையை அறிந்து கொண்டேன், அவருடைய பணம் நன்மையின் பால்
செலவிடப்பட்டதையும் அறிவேன், இந்த பையை பிடி, இதிலுள்ள தீனார்கள் உனது எஜமானின்
பெருநாள் இரவு செலவுக்கு போதுமாகட்டும்.
பணியாள் திரும்பி வந்து அந்த
பையை தனது எஜமானனிடம் கொடுத்தான். அவர் அதை திறந்து பார்க்கையில் அதனுள் நூறு தீனார்கள்
இருந்தது. மகிழ்ச்சி பொங்க தனது மனைவியிடம்...
உம்மு அப்துல்லாஹ்வே இதோ நூறு தீனார்கள், நம்முடைய இறைவன் அனுப்பி தந்துள்ளான். எனக்கூற...
அவளும் மகிழ்ச்சியில் விரைந்து
வாருங்கள், கடைத்தெருவுக்கு சென்று நம்முடைய
குழந்தைக்கு தேவையான புது துணிகளையும் காலனிகளையும் வாங்கி வருவோம். என அழைத்தால்.
அந்த நேரத்தில் அவர்களுடைய
வீட்டு வாயில் கதவு தட்டப்பட்டது, கதவை திறந்து பார்த்தால்... அவருடைய மற்றொரு தோழரான உஸாமாவின் பணியாளர் அவருடன்
கடிதம் ஒன்றும் வந்திருந்தது. அதில் எனக்கு
ஏதேனும் கடனாக தரும்படி உதவி வேண்டி எழுதப்பட்டிருந்தது. இவரும் அதை பார்த்தவுடன்
ஹாஷிம் கொடுத்தனுப்பிய பையை அப்படியே... அதிலிருந்து எதுவும் எடுக்காமல் கொடுத்தனுப்பிவிட்டார்.
மனைவியும் குழந்தையும் தயாராகி வாருங்கள் எனக்கூற... அதற்கு கனவர் எனது
தோழர் உதவி தேடி வந்தார்கள், எப்படி நன்மை செய்யாமல்
இருப்பது? அதனால் அந்த பணத்தை கொடுத்து
விட்டேன் எனக்கூறினார்.
அப்போது மீண்டும் ஒரு தடவை
கதவு தட்டப்பட்டது, கதவை திறந்து பார்த்தால் தனது நண்பன் ஹாஷிம் வந்திருந்தார், மகிழ்சியுடன் வரவேற்று
உள்ளே அழைத்தார்.
ஹாஷிம் கூறினார்: உன்னுடைய பணியாளரிடம் கொடுத்தனுப்பிய
அதனுள் நூறு தீனார்கள் இருந்ததே... அந்த பையை பற்றி கேட்பதற்காகவே வந்தேன், இல்லை அது வந்து அந்த
பை...... எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்த
பை ஹாஷிமுடைய கையில் இருப்பதை கண்டு திகைத்து போய்விட்டார். இது எப்படி உனது கைக்கு
வந்தது? எனக்கேட்டார்.
உனது பணியாளர், கடிதம்
கொண்டு வந்தபோது இந்த பையைத்தவிர என்னிடம் வேறு ஏதும் கிடையாது, அதை அப்படியே நான்
உனக்கு கொடுத்து அனுப்பினேன். அதன்பிறகு நான் உஸாமாவிற்கு உதவி கேட்டு எழுதியிருந்தேன்..
உடனே அவர், ஒரு தீனாரும் எடுக்காமல் நீ அவருக்கு கொடுத்தனுப்பிய இந்த பையை..
எனக்கு கொடுத்தனுப்பியிருந்தார். அது எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது. சரி அந்த
ரகசியத்தைப்பற்றி உன்னிடம் கேட்கலாம் என்றுதான் வந்தேன் என்க்கூறினார்.
இதைக்கேட்ட அம்மனிதர் சிரித்துவிட்டுச்
சொன்னார் உஸாமா என்னிடம் உதவி கேட்டிருந்தார் அதனாலே இந்த பையை அவருக்கு
கொடுத்தனுப்பினேன். உன்னை விட என்னை நீ தேர்ந்தெடுத்து இந்த பையை என்னிடம் கொடுத்தனுப்பினாயே
அதுபோல..., இதைக்கேட்ட ஹாஷிம் சிரித்து
விட்டார். மேலும் கூறினார் உன்னையும், உன் குடும்பத்தை விடவும், உஸாமாவை நீ தேர்ந்தெடுத்துள்ளாய். சரி உனது
அபிப்ராயம் என்ன? இந்த நூறு தீனார்களை நாம் மூவரும் பங்கிட்டு கொள்ளலாமா..? அல்லாஹ் அபிவிருத்தி (பரக்கத்) செய்வானாக.. ஹாஷிம்.
இந்த கதையை கேட்ட அரசர்,
அந்த மூன்று நண்பர்களுக்கும்... ஆயிரம் தீனார்கள் அளிக்குமாறு உத்தரவிட்டார். கைகளில் ஆயிரம் தீனார்களுடன்
தனது வீட்டிற்குள் நுழைந்த அம்மனிதர் இது பற்றி என்ன நினைக்கிறாய் அப்துல்லாஹ்வின்
தாயே..! அல்லாஹ் நம்மை
நஷ்டம் அடையச் செய்துவிட்டானா? எனக் கேட்டார்?
இல்லை, இல்லை, அல்லாஹ், நம்மை நஷ்டம் அடையச்செய்துவிடவில்லை, மாறாக, நமது வாழ்வாதாரத்தை
(ரிஜ்கை) அதிகரித்து தந்துள்ளான்! என அந்த பெண்மணி (அப்துல்லாஹ்வின் தாய்) பதிலுரைத்தாள்".
அந்த மனிதன் (அப்துல்லாஹ்வின் தந்தை) கூறினார்: "இப்போதாவது
தெரிந்துகொண்டாயா? என் மனைவியே? அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது ஒரு “இலாபகரமான வணிகமாகும்.”
No comments:
Post a Comment