النَّثْرُ - أَوَّلُ
الْخُلَفَاءِ الرَّاشِدِيْنَ
1. நேர்வழிபெற்ற முதல் ஆட்சியாளர் –
கலீபா
மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416.
திருநெல்வேலி- மாவட்டம்,
செல்: +919488142358
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் யானை ஆண்டிற்கு பிறகு இரண்டு ஆண்டு ஆறு மாதங்கள் கடந்த
நிலையில் கி.பி.573 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள்.
அறியாமை காலத்து குறைஷி குல செல்வந்தர்களுல் ஒருவராகவும், சுதந்திர ஆண்களில் முதலில் இஸ்லாத்தை தழுவியவராகவும், நேர்வழி பெற்ற கலீபாக்களில் முதலாமானவருமாகவும், சொர்க்கவாதி என சுபச்செய்தி
கூறப்பட்ட பத்து நபர்களில் ஒருவராகவும் இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (முகம்மது
நபி (ஸல்)) மக்காவிலிருந்து மதீனா விற்கு (அகதியாக) ஹிஜ்ரத் செல்லும் போது அபூபக்கர்
ரலி அவர்களும் நபியுடன் தோழராக உடன் சென்றார்கள். பத்ர் போர் உட்பட முகம்மது நபி கலந்து
கொண்ட அத்துனை போர்களிலும் கலந்து கொண்டார்கள். சித்தீக் என்ற பட்டப்பெயர் முகம்மது
நபியால்(ஸல்) அன்னாருக்கு சூட்டப்பட்டது.
கலீபா-ஆட்சி பொறுப்பு:
முகம்மது நபி நோயுற்று மரணத்தை
நோக்கியிருந்த தருவாயில் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களை மக்களுக்கு தலைமையேற்று தொழுகை
நடத்துமாறு கூறினார்கள். (இதுவே நபிக்கு பிறகு அபூபக்கர் சித்தீக் (ரலி) தான் தலைவர்-ஆட்சியாளர் என்பதற்கு
ஆதாரமாக கருதப்படுகிறது. அவ்வாறே) நபியின் மரணத்திற்கு பிறகு கலீபாவாக ஆட்சியாளராக
அபூபக்கர் (ரலி) தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். ஷாம் தேசம், ஈராக் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய
படைகளை அனுப்பி ஷாம் தேசத்திலும், ஈராக்கிலும் பெரும்பகுதிகளை வென்றெடுத்தார்கள், அவருடைய ஆட்சி காலம் இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் இருந்தது.
இஸ்லாமிய அழைப்பு பணி:
அபூபக்கர் சித்தீக் ரலி தன்னுடைய
கூட்டத்தார்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வந்தார்கள், அவரின் மூலமாக பல நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள், அதில் குறிப்பிட தகுந்தவர்கள்
சுபைர் இப்னு அவ்வாம் (ரலி),
உஸ்மானிப்னு அப்பான் (ரலி),
தல்ஹா இப்னு அப்துல்லாஹ்
(ரலி),
சஃதிப்னு அபீ வக்காஸ் (ரலி),
அப்துர் ரஹ்மானிப்னு அவ்ப்
(ரலி),
உஸ்மானிப்னு மழ்வூன் (ரலி),
அபூ உபைததிப்னு ஜர்ராஹ் (ரலி),
அபூ சலமதிப்னு அப்துல் அசத் (ரலி),
அர்கமிப்னு அபீ அர்கம் (ரலி), இது தவிர மற்றும் பலர் உண்டு.
இதேபோல் அபூபக்கர் சித்தீக்
ரலி உறவினர்களும் , அவருடைய இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா(ரலி), அவருடைய மகன் அப்துல்லாஹ்(ரலி), அவருடைய மனைவி உம்மு ரும்மான்(ரலி), பணியாளர் ஆமிரிப்னு புகைரா(ரலி), ஆகியோரும் இஸ்லாத்தை தழுவியிருந்தனர்.
சமூக அந்தஸ்த்து:
முஸ்லிம் சமூகத்தில் அபூபக்கர்
சித்தீக் ரலி அவர்களுடைய இடத்தை (அந்தஸ்த்தை) வேறு எந்த முஸ்லிமை கொண்டும் ஈடு செய்திட
முடியாது. முகம்மது நபிக்கு பிறகு முஸ்லிம் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மனிதராக திகழ்ந்தார்கள்.
மக்கள் முகம்மது நபியை (ஸல்)
பொய்படுத்திய வேளைகளில் நபியின் மீது முழு நம்பிக்கை வைத்து நபியை (ஸல்) உண்மைபடுத்தினார்கள், மக்கள் முகம்மது நபியை (ஸல்)
கை விட்டபோது நபிக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள். அதன்மூலம் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து உயர்ந்த அந்தஸ்த்தை
அடைந்துகொண்டார்கள்.
மரணம்:
அபூபக்கர் சித்தீக் (ரலி)
அவர்கள் ஹிஜ்ரி 13 ஜமாதுல் ஆகிர் பிறை 22 திங்கள்கிழமை இயற்கை எய்தினார்கள். அப்போது அவருக்கு வயது 63ஆகும். தன்னுடைய இறுதி குளிப்பாட்டலை தனது மனைவி அஸ்மா பின்த் உமைஸ் செய்ய வேண்டும் என
வஸிய்யத் (உபதேசம்) செய்திருந்தார்கள், அன்னாரது உடல் நபியின் கபரு
அருகில் (நபிக்கு வலது புறத்தில்) நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது.
இவ்வுலகில் அவருடைய கடைசி
வார்த்தைகள் பின்வரும் குர்ஆன் வசனமாக இருந்தது. இறைவா! என்னை முஸ்லிமாக மரணிக்க
செய்! என்னை நல்லோர்களுடன் சேர்த்து விடு! (சூரா யூசுப்- 101).
இறைவன் (அபூபக்கர் சித்தீக்
(ரலி)) அவர்களுடைய தலைமையில்... இஸ்லாத்திற்கு வளர்ச்சியையும், மிகப்பெரிய வெற்றியையும், காலத்தால் அழிக்க
முடியாத வரலாற்று சிறப்புமிக்க மிகப்பெரிய
வெற்றியையும் கொடுத்தான்.
No comments:
Post a Comment