Tuesday, 23 April 2019

இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி



3. இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி
தமிழாக்கம்:
மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416. 
திருநெல்வேலி- மாவட்டம், 
செல்: +919488142358  


இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி 849ஆம் ஆண்டில் கி.பி-1445., கெய்ரோவில் பிறந்தார். இமாமவர்களுக்கு ஆறு வயதாக இருக்கும் போது அவருடைய தந்தை மரணம் ஆகி விட்டார்கள். யதீமாக அனாதையாக வளர்ந்தார்கள். எட்டு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டு ஹாபிழாகி விட்டார்கள். இஸ்லாமிய மார்க்க மேதைகள் அதிகம் வாழ்ந்த காலத்தில் இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி வாழ்ந்து வந்தார்கள். மூத்த பல மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை தன்னுள் வாங்கி அதன் வழியில் தன்னை அமைத்துக்கொண்டார்கள்.
அவருடைய கற்றல் பயனங்கள் நீண்ட தூரமானதாகயிருந்தது., கல்வி பெறுவதற்காக ஹிஜாஸ்,ஷாம், யமன், இந்தியா, மேற்கத்திய இஸ்லாமிய தேசம் போன்ற பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்கள். பின்னர் ஹதீஸ் கலையை மத்ரசதிஷ் ஷைகூனிய்யாவில் கற்றுத்தேறினார்கள். தன்னுடைய 40 வது வயதிற்குள்ளேயே பல்வேறு நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்கள்.
இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி அவர்கள் ஹிஜ்ரி 9 ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மிகப்பெரிய இஸ்லாமிய மார்க்க மேதையாக விளங்கினார்கள். அந்த கால கட்டத்தில் தப்சீர், ஹதீஸ், பிக்ஹ் மார்க்கச்சட்டம், வரலாறு, மொழியறிவு போன்ற பல கலைகளில் தனது நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். எழுத்து துறையில் முழுமையான தகுதியை அடைந்து விட்டார்கள். இசுலாமிய மார்க்க அறிவைத் தனது 40ஆவது வயது வரை கற்பித்து வந்தார்கள். அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞானத்திலும், நூல்களை எழுதுவதில் தமது இறுதி காலம் வரை கழித்து வந்தார்கள்.
இமாமவர்கள் தனது பதினேழாம் வயதில் எழுத ஆரம்பித்தார்கள்.  சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப்பணிக்கு தன்னை அர்பணித்தார்கள். ​​ஒரு நாளைக்கு சுமார் 40பக்கம் வரை எழுதி வந்தார்கள். இமாமவர்கள் ஏறத்தாழ 600நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாதாகவும், மேலும் சிலர் இமாமவர்கள் 300 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி மற்றும் இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ ஆகிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களும் இணைந்து குர்ஆனின் விளக்கவுரை நூலான தப்சீர் ஜலாலைன் எனும் நூலை வெளியிட்டுள்ளனர். இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ அவர்கள் சூரா கஹ்ப் முதல் சூரா நாஸ் வரை விளக்கவுரை எழதினார்கள். அவருடைய அதேபானியில் மீதமுள்ள சூரா பகரா முதல் சூரா இஸ்ரா  வரை இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி விளக்கவுரை எழதி முடித்தார்கள்.
இமாம் ஜலாலுத்தீன் அஸ்-சுயூத்தி தனது 60வது வயதில் தான் பிறந்த நகரான கெய்ரோவிலேயே 19ஆம் தேதி ஜமாதுல் அவ்வல் மாதம் ஹிஜ்ரி911ல், கி.பி.1505ல் இயற்கை எய்தினார்கள். கெய்ரோவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அங்கே அவருடைய கப்ரு அமைந்திருக்கும் பகுதி பிரபல்யமாக அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

XII std Arabic Public Question March 2023

XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing