2. இமாம் முஸ்லிம் (ரலி)
தமிழாக்கம்:
மவுலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி.
செல்: +919488142358
அபுல்
ஹுஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜுல் குஷைரி (ரலி) என்பது அன்னாரது முழுப்பெயர். இவர்கள் ஹஜ்ஜாஜ் என்பவரின் புதல்வர் ஆவார்கள். அபுல்
ஹுஸைன் எனும் புனைப் பெயர் கொண்டு அழைக்கப்படுவர். இவர்கள் அரபுகளால் அறியப்பட்ட குஷைர்
வர்க்கத்தை சார்ந்தவர்கள். நைஸாபூர் என்பது ஈரான் ஹரசான் எனும் பகுதியில் உள்ள
நகரம். நன்மைக்கும், கல்விக்கும் பெயர்போன அழகான நகரம். அந்த நைஸாபூரில் ஹிஜ்ரி206ல் கி.பி821ல் பிறந்தார்கள்.
இமாம் முஸ்லீம் இறையச்சமுடைய, நற்குணமுடைய
மற்றும் அறிவார்ந்த வீட்டில் வளர்ந்தார்கள். அவரின் தந்தை
ஹஜ்ஜாஜ் பின் முஸ்லிம் இப்னு குஷைர் கல்வியின் மீது பிரியமுடையவராக இருந்தார். அறிவுடையோர்
வட்டங்களை, உலமாக்கள் சபையை நேசிக்கிற ஒருவராகவும் இருந்தார்.
இமாம் முஸ்லிம் ஆரம்ப கால அறிவைப் பெற தனது
பயணத்தைத் தொடங்கினார், 12வயது கூட கடந்திருக்கவில்லை,
அப்போதே ஹதீஸ்களை செவிமடுத்து அதை மனனமிடலானர்கள்.
இமாம் முஸ்லீம் அவர்களுடன் தொடர்புடைய பெரியவர்கள் அதிகம் உண்டு., அவர்களில் 220க்கும் அதிகமான பெரியவர்கள் இருந்ததாக
எண்ணிக்கையில் கூறப்படுகிறது. மக்காவில் அப்துல்லாஹிப்னு
மஸ்லமதில் கஃநபிய்யி(ரஹ்) என்ற
ஆசிரியரிடமிருந்து ஹதீஸ்களை செவிமடுத்து தனது நூலில் தொகுத்துள்ளார்கள். அன்னாரே இமாமவர்களின்
மிகப்பெரிய ஆசிரியராவார். மேலும் கூஃபா, ஈராக்,
மக்கா-மதீனா ஹரமைன் மிஸ்ரு ஆகிய பகுதிகளிலிருந்தும் ஹதீஸ்களை செவிமடுத்து தனது ஸஹீஹு
முஸ்லிம் நூலில் தொகுத்துள்ளார்கள்.
முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் 55ஆம் வயதில் தன்னுடைய பிறந்த
நகரான நைஸாபூரிலேயே 25ஆம் தேதி ரஜப் மாதம் ஹிஜ்ரி261ல், கி.பி.874ல் இறைவனடி
இயற்கை எய்தினார்கள்.
ஹிஜாஸ்,
எகிப்து, ஸிரியா முதலிய
பல தேசங்களுக்குச் சென்று இமாம் புகாரியைப் போன்று பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து மூன்று
லட்சம் ஹதீஸுகளைச் சேகரித்து அவற்றை அலசித் தெளித்து வடித்துத் திருமணிகள் போன்ற 7000 ஹதீஸுகளை தேர்ந்தெடுத்து
ஸஹீஹு முஸ்லிம் என்ற தனது நூலில் தொகுத்துள்ளார்கள்.
அகந்தை, மமதை, தற்பெருமையற்றவர். எந்த வினாக்களுக்கும் தயங்காது
தைரியமாய் விடைபகரும் ஆற்றல் படைத்தவர். இறைபக்தியும் நற்குண நல்லொழுக்கங்களும் நிறைந்தவர்.
No comments:
Post a Comment