Wednesday, 5 July 2023
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி ஈஸால் சலாப் செய்வது பற்றிய ஃபத்வா!
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி ஈஸால் சலாப் செய்வது பற்றிய ஃபத்வா!
-------------
கேள்வி: குர்ஆனை ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்கு சேர்ப்பிப்பது பற்றிய மார்க்க தீர்ப்பு என்ன?
ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மை சேர்ப்பிதற்கான மார்க்க தீர்ப்பு என்ன?, (எகிப்து அல்-அஸ்ஹர் அல்-ஷரீப்பில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி அகாடமியில் உள்ள ஃபத்வா குழுவிடம் இக்கேள்வி சமர்ப்பிக்கப்பட்டது, அதற்கு ஃபத்வா குழு பின்வருமாறு தீர்ப்பளித்துள்ளது:)
முதலாவதாக: குர்ஆனை ஓதி இறந்தவர்களுக்கான நன்மையை எத்தி வைப்பதுஅதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் . அந்த நன்மை இறந்தவர்களை சென்றடையும் - இறைவன் நாடினால்.
இறந்தவர்களுக்கு இபாதத் உள்ளிட்ட நற்காரியங்கள் மூலம் நன்மைகள் சேரும் என்பது மார்க்க சான்றுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் புகாரீ மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் இபாதத் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபி(ஸல் )அவர்களிடம் மார்க்க தீர்ப்பு கேட்க வந்தாள், 'எனது தந்தை வாகனத்தில், உறுதியாக நிற்க முடியாத ஒரு முதியவர், நான் அவர் சார்பாக ஹஜ் செய்ய வேண்டுமா? என்று அவள் வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்று கூறினார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்த பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு மனிதர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய தாயார் இறந்துவிட்டார், எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அது அவருக்கு நன்மை பயக்குமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதில் கூறினார்கள்
மற்றுமொரு ஹதீஸ் இமாம் அபூ தாவூத் அவர்கள் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: "(இறந்த) அவர் ஒரு முஸ்லிமாக இருந்தால், நீங்கள் அவர் சார்பில் ஒரு அடிமையை விடுவித்தாலோ அல்லது அவர் சார்பாக தர்மம் செய்தாலோ அல்லது அவருக்காக ஹஜ் செய்தாலோ அதன் நன்மை அவரை சென்றடையும்.
இமாம் இப்னு மாஜா அவர்கள், இப்னு புரைதா அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்.
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
எனது தாயார் இறந்து விட்டார்.அவர் மீது சில நோன்புகள் உள்ளன. அவர் சார்பாக நான் நோன்பு நோற்க வேண்டுமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்: "ஆம்."
நோன்பு, ஹஜ் , குர்ஆனை ஓதுவது நன்மையான மற்றும் இபாதத் செயல்களாகும். அவற்றுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எனவே
குர்ஆனை ஓதப்படுவதின் நன்மை இறந்தவர்களைச் சென்றடைகிறது என்பதை இந்த ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது ஹனஃபி சட்டவியல் அறிஞர்கள், ஹன்பலி சட்டவியல் அறிஞர்கள் மற்றும் பிற்கால மாலிகி உள்ளிட்ட பெரும்பான்மையான அறிஞர்களின் கோட்பாடாகும் .மற்றும் இமாம் அல்-நவவி , தர்திரி போன்றவர்களும் இக்கருத்தை ஏற்றுள்ளார்கள். குர்ஆன் மற்றும் திகருகளை ஓதி, அதன் நன்மையை இறந்தவருக்கு வழங்குவதில் எந்த தவறும் இல்லை., அல்லாஹ் நாடினால் அவருக்கு அதன் நன்மைகள் நிச்சயம் வழங்கப்படும்.
(அரபி மூலத்தில் இருந்து தமிழில்: மௌலவி M. முஹம்மது ஹுசைன் ரஷாதீ.)
Subscribe to:
Post Comments (Atom)
XII std Arabic Public Question March 2023
XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing
-
அஸ்மாவுல் ஹுஸ்னா اسماء الحسنہ ا لرَّحْمَنُ 1. *அர் - ரஹ்மான்.* பொருள் - அளவற்ற அருளாளன். الرَّحِيمُ 2. *அர் - ரஹீம்.* ப...
-
1. ஹஜ்ஜத்துல் விதா தமிழாக்கம்: மவுலானா, K. அப்துல் சுக்கூர்,M.A.,B.Ed ஆலிம்,ரியாஜி. கல்லிடைக்குறிச்சி செல்: 9488142358 ...
-
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ் *புகாரி என்ற பிரபல்யமான ஹதீஸ் நூலின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரி என்ற நூலின் ஆசிரியர் இமாம் இப்னு ஹஜர...
No comments:
Post a Comment