Tuesday, 17 January 2023

தனி மனித ஒழுக்கம் -1

*•༻༺•❁•༻༺•❁•༻༺•❁•༻༺•* *மழலையருக்கு ❁ மார்க்கம்* *•༻༺•❁•༻༺•❁•༻༺•❁•༻༺•* *WhatsApp❖group* *╚══❖•ೋೋ•❖══╝* *பிள்ளைகளின் தர்பிய்யத்திற்காக பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வாசித்து காட்ட வேண்டிய தொடர் பதிவுகள்.* ❇️ *தொடர்* 0️⃣8️⃣ *15 கழிவறையில் பேசக்கூடாது* சில குழந்தைகள் கழிவறையில் அமர்ந்து பாட்டு பாடுகிறார்கள், விசில் அடிக்கிறார்கள், பேசவும் செய்கிறார்கள் இது நல்ல பழக்கம் அல்ல. இது ஒழுங்கீனமாகும். கழிவறையில் மௌனமாக இருக்க வேண்டும். மிக அவசிய தேவைக்கு மட்டும் பேசலாம். *16 சலாமிற்கு பதில் சொல்லக்கூடாது* கழிவறையில் அமர்ந்து கொண்டு ஸலாம் சொல்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, பாங்கிற்கு பதில் சொல்வது கூடாது மேலும் அசுத்தத்தையோ தனது மர்ம ஸ்தானத்தையோ பார்க்கக் கூடாது. இதை அல்லாஹ் விரும்புவதில்லை. (ஷாமீ01/ 340) *17 குளியலறையில் சிறுநீர் கழிக்க கூடாது* குளியலறையில் சிறுநீர் கழிப்பது நல்ல செயல் அல்ல. நமது நேசர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை தடுத்துள்ளார்கள். குளியலறையில் சிறுநீர் கழிப்பதால் வஸ்வஸாக்கள் உண்டாகின்றன.(அபூதாவூத் 01 05) *18 நின்ற நிலையில் சிறுநீர் கழிக்க கூடாது* நின்று கொண்டே, சிறுநீர் கழிப்பது நல்ல பழக்கம் இல்லை. ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். நான் நின்ற நிலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தேன் "உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதே" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அன்று முதல் நான் நின்று கொண்டு சிறுநீர் கழித்த தில்லை. நூல் (திர்மிதீ 01/ 09) *19 வலது கையால் கழுவ கூடாது* சிறுநீர் கழித்த பின் அல்லது மலம் கழித்த பின் வலது கையால் சுத்தப்படுத்தக் கூடாது. நமது நேசர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை தடுத்துள்ளார்கள். (அபூதாவூத் 01 05) *20 கழிவறையிலிருந்து வெளியேறும் முறை மற்றும் துஆ* கழிவறையில் இருந்து வெளியே வந்தால் வலது காலை முதலில் வெளியே வைக்க வேண்டும் பிறகு இந்த துஆவை ஓத வேண்டும். *«غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي»* *குஃப்ரானக அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்ஹப அன்னீல் அதா வ ஆஃபானீ* உள்ளிருந்து வரும்போது துஆ ஓதிக்கொண்டே வரக்கூடாது. வெளியே வந்து தான் ஓத வேண்டும். (அமலுல் யௌமி வல் லைலா லிஇப்னி ஸுன்னி எண் 22, தப்ரானீ எண் 381 ) அன்பு குழந்தைகளே! இந்த ஒழுக்கங்களை நீங்கள் ஓன்று தவறாமல் பின்பற்றுவீர்கள். என்று நான் நம்புகிறேன். அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அமல் செய்யக்கூடிய தௌஃபீக் தந்தருள்வானாக! ஆமீன்!! பிள்ளைகளே! இதுவரை என்னென்ன சொன்னோம்? நினைவிருக்கிறதா? கேட்கிறேன் சொல்லுங்கள்! ▪️மலம் கழிக்கும் தேவை ஏற்படுவதும் அருட்கொடையா ?ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் விளக்குங்கள்‍? ▪️கழிவறைக்கு எப்போது செல்ல வேண்டும்? (மலம் அழுத்தமாக வருவதற்கு முன்பே செல்ல வேண்டும்) ▪️மலம் கழிக்க சென்றால் எங்கு செல்ல வேண்டும்? (மனித பார்வை படாத இடத்திற்கு செல்ல வேண்டும்) ▪️கழிவறைக்கு செல்லும் முன் எந்த நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்? (தலையை மறைத்தல், செப்பல் அணிதல், துஆ ஓதுதல், அல்லாஹ்வின் திருநாமம் எழுதப்பட்ட பொருளை உள்ளே எடுத்து செல்லாமல் தவிர்த்தல்.) ▪️கழிவறைக்கு செல்லும் முன் எந்த துஆவை ஓத வேண்டும், மறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? ▪️ கழிவறையில் நுழையும் முறை என்ன? ▪️ கழிவறையில் எவ்வாறு எதை நோக்கி அமர வேண்டும்? (கால்களை விரித்து, இடது காலின் மீது அழுத்தம் கொடுத்து, முகம் முதுகு கிப்லாவை நோக்காமல் அமர வேண்டும்.) ▪️ கழிவறையில் பேண வேண்டிய அந்த ஐந்து ஒழுக்கங்கள் என்ன? (கழிவுகளை தண்ணீர் ஊற்றி அகற்றுவது, தண்ணீரின் மூலம் சுத்தப்படுத்துவது, கழிவறைக்கு உள்ளேயே ஆடைகளை அணிந்து கொள்வது, சோப்பின் மூலம் கைகளை கழுவுவது, தேவை முடிந்தது சீக்கிரம் வெளியே வருவது.) ▪️கழிவறையில் செய்யக்கூடாத ஆறு செயல்கள் என்ன? (பாட்டுப் பாடுவது, பேசுவது, விசில் அடிப்பது, ஸலாம் சொல்வது, ஸலாமிற்கும் பாங்கிற்கும் பதில் சொல்வது, அசுத்தத்தை மற்றும் மர்மஸ்தானத்தை பார்ப்பது, நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது, வலது கையால் சுத்தம் செய்வது.) ▪️ கழிவறையில் இருந்து வெளியே வரும் முறை என்ன? மேலும் வெளியே வந்ததும் என்ன துஆ ஓத வேண்டும். *⁩✿┈┈┈┈┈•✶✾✶•┈┈┈┈┈✿‏* *தொடரும்.....* *PLEASE SHARE MAXIMUM_______________*

No comments:

Post a Comment

XII std Arabic Public Question March 2023

XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing