Monday, 27 September 2021
அல்குர்ஆன் வசனங்கள் திருக்குர்ஆனின் சிறப்பு
சுக்கூர் ரியாஜி SUKKUR RIYAJI
அல்குர்ஆன் வசனங்கள் திருக்குர்ஆனின் சிறப்பு
ஒரு மூதாட்டி வீதியில் தினசரி கையேந்தி பிச்சை எடுத்து வந்தார்.இதை கவனித்து வந்த ஒருவர் அவரை விசாரித்தார் . உங்களை கவனிக்க யாரும் இல்லையா?
உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? என கேட்டு அறிந்தார்.
அதற்கு அந்த மூதாட்டி " என் கணவர் இறந்து விட்டார். என் மகன் வெளி நாட்டில் சம்பாதிக்க சென்று உள்ளான் என பதிலளித்தார்.
உங்கள் மகன் பணம் ஏதும் அனுப்பி வைப்பதில்லையா? என அவர் கேட்ட போது என் மகன் ஒவ்வொரு மாதமும் ஒரு வண்ண காகிதம் ஒன்றை அனுப்பி வைப்பது உண்டு, அதை வீட்டின் சுவர்களில் ஒட்டி அலங்கரித்து வைத்து இருக்கின்றேன் என்றார் . இதைக் கேட்ட அந்த நபர் அந்த அம்மையார் வீட்டிற்கு சென்று பார்த்த போது ஆச்சரியம் அடைந்தார். அந்த மூதாட்டியின் மகன் ஒவ்வொரு மாதமும் ரூ 50000/= க்கு டிராஃப்ட் அனுப்பி வைப்பது உண்டு அதனை இவர் சுவற்றில் ஒட்டி அலங்கரித்து வைத்து இருக்கின்றார்.
காரணம் படிப்பறிவு இல்லை. இதை விளங்கிய அந்த மூதாட்டி ஆனந்தம் அடைந்தார்.
இது போன்றே நாமும் இறையருள் மிகுந்த அருள் மறை குர்ஆனை கற்று உணராமல் வீடுகளில் புனிதப் பொருளாகக் கருதி மாடத்தில் வைத்து வருகிறோம்.
வளமான வாழ்க்கையை தேடி அகிலத்தாரிடம் யாசித்து வருகிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன்.
Subscribe to:
Post Comments (Atom)
Arabic Question
XII std Arabic Public Question March 2023
XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing
Arabic Language
-
அஸ்மாவுல் ஹுஸ்னா اسماء الحسنہ ا لرَّحْمَنُ 1. *அர் - ரஹ்மான்.* பொருள் - அளவற்ற அருளாளன். الرَّحِيمُ 2. *அர் - ரஹீம்.* ப...
-
தமிழக பள்ளிகளில் அரபு மொழிப்பாடம் மெளலவி. K. அப்துல் சுக்கூர் ரியாஜி தமிழ்நாடு அரபுச் சங்கம். *தமிழ்நாடு பள்ளிக்கல்வி மேல்நிலை வகுப்பி...
-
1. ஹஜ்ஜத்துல் விதா தமிழாக்கம்: மவுலானா, K. அப்துல் சுக்கூர்,M.A.,B.Ed ஆலிம்,ரியாஜி. கல்லிடைக்குறிச்சி செல்: 9488142358 ...
-
குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிர...
-
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹ் *புகாரி என்ற பிரபல்யமான ஹதீஸ் நூலின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரி என்ற நூலின் ஆசிரியர் இமாம் இப்னு ஹஜர...

No comments:
Post a Comment