நபி சுலைமான் (அலை)
அவர்களின் ஹுத்ஹுத் பறவை
உயர்வான அல்லாஹ் நபி சுலைமான்
(அலை) அவர்களுக்கு பறவையுடைய மொழியை விளங்கிக்கொள்ளும்
ஞானத்தை வழங்கி இருந்தான். ஒருநாள் சுலைமான் நபி அவர்கள் ஹுத்ஹுத் பறவையை காணாமல் தேடி, அதனை பார்க்க முடியவில்லையே....
எனக்கு தெரியாமல் எங்கே சென்று விட்டது? அது திரும்பியதற்கு பின்னால்
பயங்கரமான தண்டனயை கொடுப்பேன், என்று அவர்கள் கூறினார்கள்.
சிறிது நேரம் கழித்தப் பின் ஹுத்ஹுத் திரும்பி வந்தது.
அதனிடம் ஹுத்ஹுத்தே! நீ எங்கு
சென்றாய்? என்று கேட்டார்கள்.
ஹுத்ஹுத் கூறியது: நீங்கள்
அறியாத ஊரின் பக்கம் சென்றேன். உங்களுக்கு மகத்தான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன்.
அதற்கு சுலைமான் நபி அவர்கள்
அந்த ஊரின் பெயர் என்ன என்று கேட்க "ஸபா” என்று கூறியது. நீ அங்கு என்ன பார்த்தாய்? என்று கேட்க
"அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு
வழிப்படும் மனிதர்களை பார்த்தேன்” என்று கூறியது. பல்கீஸ் என்ற
பெயரை கொண்ட அரசி அவர்களை ஆட்சி செய்கிறாள். மேலும் அவளுக்கு விலை மதிப்பில்லாத சிம்மாசனம்
(நாற்காலி) இருக்கிறது என்று கூறியது.
அதற்கு சுலைமான் நபி அவர்கள்
ஹுத்ஹுத்தே நான் பல்கீஸ் அரசிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி உன்னோடு அனுப்பிவைக்கிறேன். நீ அவளுக்கு அதை
சமர்ப்பித்து விடு. பிறகு அவள் அதை என்ன செய்கிறாள் என்பதை எனக்கு அறிவித்து விடு, என்று கூறினார்கள்.
ஹுத்ஹுத் அந்த கடிதத்தை சுமந்து
சென்றது. அதன் சமயம் ஸபாவை நெருங்கி அரசி உடைய மாளிகையின் பக்கம் பறந்து வந்து.. அவளை
தேடியது. பின் அவளுடைய சிம்மாசனத்தில் (நாற்காலியில்) அவள் அமர்ந்து இருந்ததை பார்த்து
கடிதத்தை அவள் முன்னால் போட்டது.
ஹுத்ஹுத் உடைய காரியத்தை கண்டு
அரசி ஆச்சிரியம் அடைந்தால். கடிதத்தை திறந்து பார்த்த பொழுது அதில் "நிச்சயமாக
இதுவாகிறது சுலைமானிடத்தில் நின்றும் உள்ளது” இன்னும் நிச்சியமாக அவனாகிறவன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டிருக்கிறான்.
என் மீது நீங்கள் உயர்வை காட்டாமல் முஸ்லிம்களாக என்னிடத்தில் வரமாட்டீர்களா? என்று எழுதி இருந்தது.
பல்கீஸ் அரசி அச்சம் கொண்டார்கள்.
தன்னுடைய அவையோர்களிடத்தில் அவசரமாக கூட்டத்தை ஏற்படுத்த உறுதிக்கொண்டாள். இன்னும்
அவர்களிடம் கூறினாள். அவையோரே! நிச்சயமாக நான்
என் விஷயத்தில் குழப்பத்திலேயே இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? என்று எனக்கு சுட்டிக் காட்டுங்கள்
என்று கேட்டாள்.
அவையில் ஒருவர் கூறினார்.
நிச்சயமாக நாம் பயங்கரமான கூட்டத்தையும், பலம் பொருந்திய படையையும்
வைத்திருக்கிறோம். நீங்கள் கூறினால் நாங்கள் ஆயத்தமாகிவிடுவோம். என்று கூறினார்கள்.
பல்கீஸ் அரசி அவர்களுக்கு கூறினார்கள். அவையோரே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக
சுலைமான் நபி அரசாங்கம் உடைய கிராமத்தில் நுழைந்தால் அதனை அழித்து நாசமாக்கி விடுவார்கள்.
என்னிடத்தில் உள்ள வெகுமதி
பொருள்களை சுலைமான் நபிக்கு நாம் அனுப்பி அவர்கள் என்ன செய்கிறார்கள். என்பதை நாம்
நோட்டம் விடுவோம். என்று சொல்லி சுலைமான் நபிக்கு மகத்தான வெகுமதியை பல்கீஸ் நாயகி
அனுப்பி வைத்தார்கள். அதை நபி சுலைமான் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அதைக் கொண்டுவந்தவரிடம்
முஸ்லிமகளாக நீங்கள் ஆகவில்லை என்றால் உங்கள் மீது பயங்கரமான படையை நான் அனுப்பிவைப்பேன்.
அதனை அழிப்பதற்கு நீங்கள் யாரும் சக்தி பெறமாட்டீர்கள் என்று கூறினார்கள்.
அவளுடைய வெகுமதியை சுலைமான்
நபி மறுத்ததை பல்கீஸ் அறிந்த சமயத்தில் கண்டிப்பாக போர்தொடுக்க படையை விரைவில் அனுப்பிவிடுவார்
என்று கூறி அவரை சந்திப்பதற்காக அவரிடத்தில் புறப்பட்டாள்.
சுலைமான் நபி பல்கீஸ் அரசி
உடைய நாற்காலியை யார் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள்? என்று தன் உதவியாளரிடம் கேட்டார்கள்.
உதவியாளர்களில் ஒருவர் கண்சிமிட்டும்
நேரத்தில் உங்களிடத்தில் நான் கொண்டுவந்து சேர்க்கிறேன். என்று கூறினார்கள். அதன் சமயம்
(நாற்காலி கொண்டுவந்து சேர்த்த சமயம்) நாற்காலியில சில மாற்றங்களை செய்தார்கள். பல்கீஸ்
அரசி(சுலைமான் நபியை) வந்தடைந்தபொழுது நாற்காலியைப்பார்த்து இது என்னுடைய நாற்காலி
என்று கூறினாள்.
பளிங்கினால் ஆன தூய்மையான
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தாள்.மாளிகையின்கீழே தண்ணீர் ஓடியது.அதை அவள் நதி என்று
எண்ணிணாள்.தன்னுடைய கணுக்காலை உயர்த்தினாள்.திகைப்படைந்து கூறினாள்.
நிச்சயமாக என்னுடைய ஆத்மாவிற்கு
நான் அநீதம் செய்துவிட்டேன். அகிலத்தார்களின் இரட்சகனான அல்லாஹ்விற்காக சுலைமானுடன்
நான் இஸ்லாமாகிவிட்டேன்.
தமிழாக்கம்:
மெளலானா, K. அப்துல் சுக்கூர், ஆலிம்,ரியாஜி, M.A.,B.Ed.
44/18. வடக்குத் தைக்கால் தெரு, கல்லிடைக்குறிச்சி-627416.
திருநெல்வேலி- மாவட்டம், செல்: +919488142358
No comments:
Post a Comment