Tuesday, 14 May 2024

XII std Arabic Public Question March 2023

XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing

Monday, 20 November 2023

Wednesday, 8 November 2023

Second Mid Term Test November 2023 Arabic Question for Class 11

11 STD Arabic Question Second Mid Term Test November 2023 Arabic Question Paper for Class 11 Government Question paper for Chennai District Second Mid Term Test November 2023 Arabic Question #Arabic

Monday, 6 November 2023

Second Mid Term Test November 2023 Arabic Question Paper for Class 12

Second Mid Term Test November 2023 Arabic Question Paper for Class 12 Government Question paper for Chennai District Second Mid Term Test November 2023 12 STD Arabic Question #Arabic

Sunday, 24 September 2023

வெட்கம்

(968) வெட்கம் வேண்டும். ======================== فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ (ஆதி மனிதர்களான நபி ஆதம்-அலை, ஹவ்வா-அலை ஆகிய) அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவர்களின் மர்ம உறுப்புகள் அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளை(ப் பறித்து) தம்மேல் போர்த்திக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். திருக்குர்ஆன்:- 7:22 நற்பண்புகளின் அடித்தளம் வெட்கம் ஆகும். வெட்கம் என்பது மனிதனை இழிவான செயல்களிலிருந்தும், பிறரை சிரமப்படுத்தும் அருவருப்பான காரியங்களிலிருந்து, கடமைகளில் குறைவு செய்வதிலிருந்தும் தடுக்கும் உரிய பண்பாகும். வெட்கம் மனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் நன்மையே ஏற்படுத்தும். சிலர் பாவத்தை பகிரங்கமாகச் செய்யத் துவங்கும்போது மற்றவர்களும் பாவம் செய்ய துணிச்சல் பெறுகிறார்கள். உலகில் பாவங்கள் மலிந்து விடுகின்றன. அதில்லாமல் பாவம் செய்ய வெட்கப்படுவது பாவங்கள் அம்பலத்திற்கு வருவதைத் தடுக்கிறது. எனவே ஒரு மனிதன் வெட்கப்படுவதன் மூலம் பிறருக்கு நன்மையே செய்கிறான். மற்றவர்களுக்கு பாவம் செய்யும் துணிச்சல் ஏற்படாமல் காக்கிறான். பிறருக்கு பலனளிக்கும் வகையில் வெட்கப்படுவதும், இறை நெருக்கத்தை ஏற்படுத்தும் நற்செயலாகும் என இஸ்லாம் இயம்புகிறது. அல்லாஹ்விடம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹுதஅலா மிக அதிகம் வெட்கமுடையவனாக இருக்கிறான். கேட்காமலேயே அதிகம் தருபவன். மனிதன் அல்லாஹ்விடம் கேட்பதற்கு கையேந்தினால் அந்த கைகளை வெறுமையாகவும், பயனற்றதாகவும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான். (ஆகவே நிச்சயம் கொடுத்துவிட வேண்டும் எனத் தீர்மானிக்கிறான்.) அறிவிப்பாளர்:- சல்மான் ஃபார்சீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3556, அபூதாவூத், இப்னுமாஜா அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களே) அல்லாஹ்விடம் வெட்கப்பட வேண்டிய முறையில் வெட்கப்படுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள் நாயகமே! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அல்லாஹ்விடம் வெட்கப்படத்தானே செய்கிறோம் என்று கூறினோம். அதற்கு அண்ணலார் (அதன் பொருள்) இதுவல்ல. அல்லாஹ்விடம் வெட்கப்பட வேண்டிய முறையில் வெட்கப்படுவது என்றால், தலையையும் அதில் உள்ள (கண், காது, நாவு முதலிய)வற்றையும் நீங்கள் (பாவத்திலிருந்து) பேணிக்காப்பதாகும்; வயிற்றையும் அதை ஒட்டியுள்ள (மர்ம உறுப்பு, கைகள், கால்கள், உள்ளம் ஆகிய)வற்றையும் நீங்கள் பேணிக்காப்பதாகும்; மரணத்தையும் (அடக்கத் தலத்தில் உடல்) மக்கி மண்ணாகிப் போவதையும் நீங்கள் எண்ணிப்பார்ப்பதாகும். மறுமையை விரும்புகிற ஒருவர், இம்மையின் கவர்ச்சியை விட்டுவிடுவார். இவற்றையெல்லாம் எவர் செய்கிறாரோ அவர்தான் அல்லாஹ்விடம் வெட்கப்பட வேண்டிய முறையில் வெட்கப்படுபவர் ஆவார்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2382 ஒரு முஸ்லிம் தன்னை எல்லாம் வல்ல இறைவன் இடைவிடாது கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னால் இந்த பாவத்தை நாம் எப்படிச் செய்வது என வெட்கப்படுவதே உண்மையான வெட்கம் ஆகும். இந்த வெட்கம் மனிதனை புனிதனாக்குகிறது. குற்றங்களைத் தடுக்கிறது. இந்த வெட்க உணர்வையே இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். மாண்புகள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக்கொண்டிருந்தார். "நீ அதிகமாக வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வர வேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு இழப்பு தான்" என்பது போல் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அண்ணலார் (தஃஹு ஃபஇன்னல் ஹயாஅ மினல் ஈமான்) "அவரை விட்டு விடு! வெட்கம் இறைநம்பிக்கையில் ஓரம்சமாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6118, அபூதாவூத்-4795 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். லிகுல்லி தீனின் குலுக்குன் வகுலுக்குல் இஸ்லாமில் ஹயாஉ) "எல்லா மார்க்கங்களுக்கும் ஓர் இயல்பு உண்டு. இஸ்லாமிய இயல்பு வெட்கமாகும்." அறிவிப்பாளர்:- ஸைத் பின் தல்ஹா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா, முஅத்தா மாலிக் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெட்கம் என்பது இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-9, முஸ்லிம்-35 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிற மனிதனுக்கு வெட்கப்படாதவன் இறைவனுக்கும் வெட்கப்படமாட்டான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ வெட்கம் என்பது மதிக்கத்தக்க ஒரு குணம். அது இல்லாமல் போனால் தான் கண்டிக்கத்தக்கது. அது எந்தளவு அதிகமாக இருக்குமோ அந்தளவு அவர் சிறந்த பண்பாளர் என்பதற்குண்டான அடையாளமாகும். வெட்கத்தின் அளவைக்கொண்டே இறைநம்பிக்கையின் அளவை கணித்துவிடலாம். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெட்கம் நன்மையே தரும். நூல்:- புகாரீ-6117 ஒரு மரம் அதன் அடிபாகத்தோடு நின்றால் அது பசுமையான மரமாகாது. ஆனால் பல்வேறு கிளைகள், இலைகளுடன் காட்சி தரும் மரமே பசுமையான மரமாகும். அதுபோல் வெட்கம் என்ற கிளையும் நம்முடைய இறைநம்பிக்கை என்ற மரத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் முழுமையான இறைநம்பிக்கையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆபாசமும், வெட்கமின்மையும் எதில் தோன்றினாலும் அது அதனைக் கறை படிந்ததாகவும், பொழிவிழந்ததாகவும் ஆக்கி விடும். வெட்கம் எதில் சேர்ந்தாலும் அது அதனை இன்னும் அழகானதாகவும், செம்மையானதாகவும் ஆக்கி விடும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெட்கமும், இறைநம்பிக்கையும் ஒருசேர இருக்கிறன. அவற்றில் ஒன்று பறிபோனால் மற்றொன்றும் பறிபோய்விடும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் ஒளிக்கும், விளக்குக்கும் ஆழமான பிணைப்பு இருக்கிறது. விளக்கு இல்லாமல் ஒளி மட்டும் இருக்கும் என்பது எந்த நிலையிலும் சாத்தியமில்லை. அதுபோல் வெட்கத்துக்கும், இறைநம்பிக்கைக்கும் இடையிலான ஒரு தொடர்பு உண்டு. வெட்கம் இல்லாதவரிடம் இறைநம்பிக்கையும் இருப்பதில்லை. பிரியாத சில வானவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிர்வாணமாக இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவர் மல ஜலம் கழிக்கும் போது தவிர மற்ற நேரங்களில் உங்களை விட்டு பிரியாத சில வானவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு வெட்கப்படுங்கள். அறிவிப்பாளர்:-அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ- 2800 முஆவியா பின் ஹயதா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் நாயகமே! எங்கள் மறைவிடத்தை நாங்கள் எப்போது மறைக்க வேண்டும்? எப்போது அதைத் திறக்க எங்களுக்கு அனுமதி உண்டு? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் "உம் மனைவி மற்றும் அடிமைப்பெண் தவிர (மற்றெல்லோரின் பார்வையைவிட்டு) உம் மறைவிடத்தை பாதுகாத்துக் கொள்!" என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள் அண்ணலாரிடம் ஆண்கள் மற்ற ஆண்களுடன் இருந்தால் என்ன (செய்ய வேண்டும்) என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் "அதை எவரும் பார்க்காத வகையில் பேணிக் கொண்டால் அதை எவரும் பார்க்க முடியாது" என்று பதிலளித்தார்கள். மேலும் அவர்கள் அண்ணலாரிடம் ஒருவன் மட்டும் தனியாக இருந்தால் என்ன (செய்ய வேண்டும்) என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் "மக்களுக்கு நீ வெட்கப்படுவதைவிட நீ வெட்கப்பட அல்லாஹ் மிகவும் தகுதியானவனாவான்" என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-2769, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத் வெட்க உணர்வு நிரம்பப் பெற்ற ஒரு முஸ்லிம் தனியாக இருக்கின்றபோதுகூட தன் மறைவிடத்தை மறைத்துக் கொள்வான். வேறு எவரும் தன்னுடன் இல்லாவிட்டாலும் அந்த நிலையிலும் வானவர்கள் தம்முடன் இருந்து தம்முடைய செயல்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த நிலையிலும் நாம் சங்கடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. மேலும் மக்களின் பார்வையைவிட்டும் தன் மறைவிடத்தை கட்டாயம் மறைத்து கொள்ள வேண்டும். ஓர் ஆணின் மறைவிடம் என்பது தொப்புள் முதல் முழங்கால் வரை ஆகும். ஓர் பெண்ணைப் பொருத்தவரை அவளது முகம் மற்றும் முன் கைகள் தவிர மற்ற உறுப்புகள் அனைத்தையும் மறைக்க வேண்டும். முகத்தைகூட குழப்பம் ஏற்படும் என்றிருப்பின் மறைத்திடல் வேண்டும். மருத்துவ சிகிச்சை, சாட்சியம் பகிர்தல் போன்ற அவசியத் தேவைகளுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வது தடைவிதிக்கப்பட்டுள்ள (தந்தை, உடன்பிறந்த சகோதரர்கள், தாய்மாமன் போன்ற) தனது மஹ்ரம்கள் முன்னிலையில் பர்தா இன்றி இருப்பதற்கு அனுமதி உண்டு. எனினும் அவர்கள் முன்னால் கூட இடுப்பு, முதுகு, வயிறு போன்ற உறுப்புகள் வெளிக்காட்டக்கூடாது. ஒருவனுக்கு தன் மறைவிடத்தை மருத்துவ ரீதியாக கட்டாயமாகத் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போதும்கூட சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் தன் மறைவிடத்தை பார்க்காத வகையில் பேண வேண்டும். உடல் அமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமான ஆடைகள் அணிவதும், உள்ளாடைகள் வெளியே தெரியும் வகையில் மிக மெல்லிசான ஆடைகள் அணிவதும், பிறர் பார்வைப்படும் விதமாக உள்ளாடைகளை உலர வைப்பதும் வெட்க உணர்வுக்கு எதிரானவையாகும். கன்னிப்பெண்களைவிடவும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப்பெண்களைவிடவும் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அண்ணலார் ஏதேனும் ஒன்றை வெறுத்தால் அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்து விடுவோம். நூல்:- புகாரீ-6102, முஸ்லிம்-4639 அப்துல்லாஹ பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல-ஜலம் கழிப்பதற்காக செல்லும் போது (தம் மறைவிடத்தை யாரும் பார்த்து விடாதபடி) பூமியோடு நெருக்கமாக ஆகும் வரையில் தமது ஆடையை மேலே உயர்த்த மாட்டார்கள். நூல்:- அபூதாவூத்-13, திர்மிதீ-14, தாரமீ-668 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (வெட்ட வெளியில்) மலம் கழிக்க நாடினால் யாரும் பார்க்காத தொலைவு வரை செல்வார்கள். நூல்:-அபூதாவூத்-2 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரின் மறைவிடத்தை மற்றவர் பார்க்க வேண்டாமென்றும், ஒரு ஆடைக்குள் இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ சேர்ந்து படுக்க வேண்டாமென்றும், ஒருவர் மற்றவரை நிர்வாணமாக பார்க்க வேண்டாமென்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-565 அக்கால அரபியர் மல-ஜலம் கழிக்கும் போது வெட்ட வெளியில் உட்கார்ந்து கொண்டும், ஒருவர் மறைவிடத்தை மற்றவர் பார்த்து கொண்டும் மல-ஜலம் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. தமது மறைவிடத்தை பிறர் பார்க்கின்றார்களே என்று வெட்கப்படமாட்டார்கள்; அதனை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இத்தகைய அநாகரிகமான நடைமுறையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடியோடு தடைசெய்தார்கள். மல-ஜலம் கழிப்பதற்கு மக்கள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்வதே அண்ணலாரின் விருப்பமாகும். வெட்கத்தின் காரணமாக அண்ணலார் ஊருக்கு வெளியே வெகுதூரத்தில் சென்று தான் காலைக்கடனை முடித்துவிட்டு வந்துள்ளார்கள். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) இறை ஆலயம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது அருமை நாயகம் (ஸல்) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த) அண்ணலாரை நோக்கி "கல் சுமப்பதற்கு (வசதியாக) உனது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார். அண்ணலாரும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள். அண்ணலாருடைய கண்கள் வானத்தை நோக்கி நிலை குத்தி நின்றன. பிறகு எழுந்து (இஸாரீ இஸாரீ) "எனது கீழாடை எனது கீழாடை" என்றார்கள். கீழாடையை (எடுத்து கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக்கொண்டார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அண்ணலார் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை. நூல்:- முஸ்லிம்-568 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோதே அல்லாஹ் வெட்கத்தின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தியுள்ளான். நமது குழந்தைகளுக்குக்கூட அவர்களின் மறைவிடத்தை மறைக்கும் அளவுக்குண்டான முழுமையான ஆடைகள் உடுத்தித்தான் அழகு பார்க்க வேண்டுமே தவிர, பேஷன் என்ற பெயரில் சிறு பிள்ளைகள் தானே என்றெண்ணி அரைகுறையான ஆடைகளை உடுத்தி விடுவது தவறேயாகும். நமது குழந்தைகளின் ஆடை விஷயத்தில் நாம் கண்டிப்பாக இருக்கும் போது, அவர்கள் வளரும் போதே வெட்க உணர்வைப் பேணியவர்களாக வளர்ந்து ஆளாவார்கள். ஆண் குழந்தை இது தனது ஆண்குறி என அறிவதற்கு முன்பே அந்த ஆண் குழந்தைக்கு கத்னா செய்து விடுவதே சிறந்தது என்கிறது மார்க்கம். தம்பதிகள் ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியான நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவரும் இறைவன் தடுத்த கனியைப் புசித்தபோது அவ்விருவரின் மறைவிடங்கள் வெளிப்பட்டது. அவ்விருவரும் தம்பதி என்பதால் அவர்கள் தங்களுக்குள் எதையும் மறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும் வெட்க உணர்வு அவர்களுக்கு இருந்ததால் மரத்தின் இலைகளை வைத்து மறைக்க முற்பட்டனர் என்கிறது தலைப்பில் காணும் திருவசனம். ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மர்ம உறுப்பை (அவர்களுடன் வாழ்ந்த சுமார் பத்து வருட காலங்களில்) ஒருபோதும் நான் பார்த்ததே இல்லை. நூல்:- ஷமாயில் திர்மிதீ-356, இப்னுமாஜா ஒருவரின் மறைவிடத்தை மற்றவர் பார்க்கக்கூடாது. ஆனால் தம்பதிக்கிடையே இந்தத் தடை கிடையாது. ஆனாலும் வெட்க உணர்வு மேலோங்கி இருந்த காரணத்தால் இவ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் வாழ்ந்துள்ளார்கள். உடையவனுக்கு மட்டுமே காட்ட வேண்டிய மேனியழகை ஊருக்கே வெளிச்சம் போட்டுக்காட்டும் ஆடையைத்தான் தற்போது நாகரீகம் என்கின்றனர் இன்றைய சில யுவதிகள். இதனை கண்டிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள இன்றைய பெற்றோரில் அல்லது கணவன்மார்களில் சிலர் கண்டுகொள்வதில்லை. நன்றிக் கெட்டவன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விண்வெளி எனும் மிஃராஜ் பயணத்தில் அண்ணலாருக்கு அல்லாஹ் ஐம்பது வேளைத் தொழுகையை கடமையாக்கினான். ஐம்பது வேளைத் தொழுகையை பரிசாகப் பெற்றுக் கொண்ட அண்ணலார் திரும்பியபோது நபி மூசா (அலை) அவர்கள் குறுக்கிட்டு நாயகமே! அல்லாஹ்விடம் சென்று ஐம்பது வேளைத் தொழுகையைக் குறைத்து வாருங்கள்! எனக் கேட்டுக் கொண்டார்கள். இதற்காக அண்ணலார் அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் சென்று வந்ததன் பலனாக அல்லாஹுதஆலா ஐம்பது வேளைகளை ஐந்து ஐந்தாக குறைத்து கடைசி ஐந்தில் சுருக்கினான். இறுதியாக நாயகமே! இதனையும் குறைத்து வாருங்கள்! என மூசா (அலை) கூறினார்கள். உடனே நான் (இன்னீ அஸ்த்தஹீ மிர் ரப்பீ அஸ்ஸ வஜல்ல அன் அர்ஜிஅ இலைஹி) "இதற்குப் பிறகு மீண்டும் (இந்த ஐந்து வேளை தொழுகையையும் குறைக்குமாறு கேட்பதற்கு) மாண்பும் வல்லமையும் மிக்க என் இறைவனிடம் செல்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்" என்று கூறி அண்ணலார் மறுத்துவிட்டார்கள். அறிவிப்பாளர்:- மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-444 மனிதன் அல்லாஹ்வினால் தனக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை அனுபவிக்கிறான். பிறகு இந்த பேருபகாரிக்கு நன்றி செலுத்துவதில் எவ்வளவு குறை வைத்திருக்குக்கிறேன் என்று எண்ணுகிறான். இதனால் மனிதனின் உள்ளத்தில் ஒருவித உணர்வு நிலை ஏற்படுகிறது அதன் பெயர் தான் வெட்கம் ஆகும். இதே உணர்வு நிலை தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் மிஃராஜ் பயணத்தின்போது ஏற்பட்டது. அதாவது அல்லாஹ் தந்துக்கொண்டிருக்கின்ற எண்ணிலடங்கா அருட்கொடைகளை அனுபவித்து கொண்டு அதற்கு நன்றியாக ஐந்து வேளைத் தொழுகைகளைக்கூட நாம் தொழ மாட்டோமா? இதனையும் குறைப்பது முறையில்லையே என்று வெட்கப்பட்டு தான், இதனையும் குறைத்துத் தா! என்று என் இறைவனிடம் விண்ணப்பிப்பதற்கு என் மனம் மறுக்கிறது என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இறைவன் வழங்கிய அருட்கொடைகளை அனுபவித்து கொண்டு ஐந்து வேளை தொழுகைகளைக்கூட அல்லாஹ்வின் திருப்திக்காக தொழவில்லை என்றால் அவனைவிட நன்றிக் கெட்டவனும், வெட்கமில்லாதவனும் வேறு யாருமில்லை. குளிக்கும்போது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருவர் (மறைவின்றி) பகிரங்கமாக குளிப்பதைக் கண்டார்கள். உடனே அண்ணலார் பள்ளிவாசலுக்கு வந்து மிம்பரில் ஏறி நின்று அல்லாஹ்வை புகழ்ந்த பின்பு "நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுடையவன் மறைவாக இருக்கக்கூடியவன். அவன் (மனிதர்களின்) வெட்க உணர்வையும் மறைத்துக் கொள்வதையுமே விரும்புகிறான். எனவே உங்களில் ஒருவர் குளித்தால் அவர் ஏதாவது ஒன்றின் மூலம் (தம்மை) மறைத்து கொள்ளட்டும்." என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- யஅலா பின் உமையா (ரலி) அவர்கள் நூல்:-அபூதாவூத், நசாயீ, முஸ்னது அஹ்மத் பஹ்ஸ் பின் ஹகீம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாயகமே! ஒருவர் தனிமையில் நிர்வாணமாக குளிக்கலாமா? என்று வினவினேன். அதற்கு அண்ணலார் மனிதர்களிடம் வெட்கத்துடன் நடந்து கொள்வதைவிட அல்லாஹ்விடம் வெட்கத்துடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிமிக்கவன் ஆவான்." என்று பதிலளித்தார்கள். நூல்:-அபூதாவூத், திர்மிதீ மக்கள் நடமாடும் வெட்ட வெளியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் உடல் தேய்த்து குளிக்கும்போது நமது மறைவிடம் நம்மையும் அறியாமல் பிறர் பார்வைக்கு தெரிந்துவிடக்கூடும். தனி அறையில் குளித்தாலும்கூட நிர்வாணமாக குளிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. குற்றாலம் போன்ற அருவிகளில் குளிக்கும்போது மறைவிடம், உடலின் அமைப்பு வெளியே தெரியும் விதத்தில் மெல்லிய ஆடையோ, மிக இறுக்கமான ஆடையோ அணிவதை தவிர்க்க வேண்டும். சுருங்கக் கூறின் எந்தவித நிலையிலும் நமது மறைவிடம் பிறர் பார்வைக்கு தெரியாதவாறு பேணிக்கொள்ள் வேண்டும். வெளியே செல்லும்போது கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)அவர்கள். கூறியதாவது. உம்மு ஹல்லாத் என்ற பெண் (நிகாப் மூலமாக) முகத்தை மறைந்த நிலையில் அறப்போரில் வீரமரணமடைந்த தன் மகனை பற்றி கேட்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அப்பெண்ணிடம் ஒரு நபித்தோழர் "நீயோ (நிகாப் மூலமாக) முகத்தை மறைத்த நிலையில் உம் மகனைப் பற்றி கேட்க வந்திருக்கிறாயே" என்று வினவினார். அதற்கு அப்பெண் (அன் அர்ஸஅ இப்னீ ஃபலன் உர்ஸஅ ஹயாஈ) "நான் என் மகனை இழந்தாலும் என் மானத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்." என்று பதிலளித்தார். நூல்:- அபூதாவூத்-2488 ஒரு பெண் தன் மகனை இழந்து சோகம் நிரம்பிய நிலையில் கனத்த இதயத்துடன் இதனைப் பற்றி விசாரிக்க வரும்போதுகூட முகத்தை மறைக்கும் நிகாப் அணிவதை மறக்கவில்லை. அக்காலத்துப் பெண்கள் முகத்தை மூடுவதை வெட்கத்தின் சின்னமாக கருதியிருக்கிறார்கள். இவ்வாறான நிலை தற்காலப் பெண்களிடமும் உருவாக வேண்டும். ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. (எனதருமை கணவர்) அருமை நாயகம் (ஸல்) அவர்களையும், என் தந்தை அபூபக்கர் (ரலி) அவர்களையும் நல்லடக்கம் செய்யப்பட்ட (எனது) வீட்டுக்குள்ளே நான் நுழையும்போது உடலைப் போர்த்திக்கொள்ளும் (ஹிஜாப்) அங்கியில்லாமல் நுழையும் பழக்கமுள்ளவளாக இருந்தேன். அதே இடத்தில் பின்னர் உமர் (ரலி) அவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு வெட்கப்பட்டவளாக நான் புர்கா அணியாமல் அங்கு நுழைந்ததில்லை. நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத் பக்-154 நபித்தோழியர்கள் உயிருடன் வாழ்வோர் ஒருபுறமிருக்க, மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்ட ஆண்களுக்குக்கூட வெட்கப்பட்டு புர்காவை கையாண்டுள்ளார்கள். பெண்கள் தர்கா ஸியாரத்துக்கு சென்றாலும்கூட உடலை முழுமையாக மறைக்கக்கூடிய புர்காவை அணிந்து தான் செல்ல வேண்டும். அல்லாஹ் அழிக்க நாடினால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முந்தைய இறைத்தூதர்களின் முதுமொழிகளிலிருந்து மக்களுக்கு கிடைக்கப்பெற்றவற்றில் ஒன்று " உனக்கு வெட்கம் இல்லையெனில் நாடியதைச் செய்து கொள்." என்ற முதுமொழியாகும். நூல்:-புகாரீ-6120, அபூதாவூத்-4796 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெட்கம் பற்றி வலியுறுத்தி போதிப்பது புதிய விஷயமல்ல. இதற்கு முன் வாழ்ந்த இறைத்தூதர்களும் இதனை போதித்துள்ளார்கள் என்பது விளங்குகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் ஒரு மனிதனை அழிக்க நாடினால் அவனிடமிருந்து வெட்க உணர்வை எடுத்து விடுகிறான். வெட்கத்தை இழந்தவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்வான். வெறுக்கத்தக்க செயல்களைச் செய்பவனிடம் அமானிதம் பேணும் பண்பு இருக்காது. அமானிதம் பேணும் பண்பு இல்லாதவன் மோசடிச் செய்பவனாகவே இருப்பான். மோசடிச் செய்பவனுக்கு இறைவனின் கருணை கிடைக்காது. இறைவனின் கருணை கிடைக்காதவன் சபிக்கப்பட்டவனாக மாறுவான். இறைவனால் சபிக்கப்பட்டவனின் கழுத்திலிருந்து இஸ்லாமிய வளையம் அகற்றப்பட்டுவிடும். அறிவிப்பாளர்:- உமர் (ரலி)அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4054 ஒரு மனிதன் வெட்கத்தை விட்டு விட்டால் அவன் சிறிய தவறுகளைச் செய்ய ஆரம்பித்து மிகப்பெரிய தவறுகள் வரை சர்வ சாதாரணமாக செய்யும் நிலைக்குப் போய்விடுவான். எந்த தீமைகளும் அவனுக்கு பெரியதாக தெரிவதில்லை. ஏனெனில் தீமைகளில் இருந்து அவனைத் தடுக்கக்கூடிய உண்மையான வெட்கம் என்ற அரண் அவனிடமிருந்து அகன்று விட்டதால் வந்த வினை. நல்லவற்றை சிந்திக்க வேண்டிய அவனது இதயம் இறந்து விடுகிறது. இன்றைய காலகட்டத்தில் மது, மாது, சூது, மோசடி, திருட்டு, போன்ற தீமைகள் அதிகரித்துக்கொண்டே போவதற்கு வெட்கமின்மையே காரணமாகும். நற்செயல்களை நேசிக்கும் பண்பையும், தீமைகளை வெறுத்தொதுக்கும் பண்பையும் வெட்கம் தான் கற்றுத் தருகிறது. பெண்களுக்கு கண்ணியம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைவன் தன்னிடமுள்ள வெட்கம் என்ற குணத்தில் ஒரு துளியை எடுத்து அதை) பத்து பங்காக பிரித்து அதில் ஒன்பதை பெண்களுக்கும், ஒன்றை ஆண்களுக்கும் கொடுத்திருக்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)அவர்கள் நூல்:- தைலமீ ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்த பிறகு தன்னுடைய வெற்றுடலை ஒரு பெட்டிக்குள் வைத்து திரையிட்டு மூடியவாறே எடுத்து செல்ல வேண்டும். இரவிலேயே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று மரண சாசனம் செய்து வைத்திருந்தார்கள். நூல்:- உசுதுல் ஙாபா இன்று நம்முடைய நடைமுறையில் இருக்கின்ற ஜனாஸா பெட்டியைப் போன்று அன்று இருந்ததில்லை. அன்றைய காலத்தில் எவரேனும் இறந்து விட்டால் வெறுமனே ஒரு பலகையில் வைத்து தூக்கிச்செல்வார்கள். அந்த வெற்றுடல் மக்கள் பார்வைக்கு தெரியும். அதனால் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் வெற்றுடல் மீது அந்நியர்கள் பார்வை படாதவாறு வைத்து, மூடி மறைத்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் , பகலில் நல்லடக்கம் செயதால் தம் வெற்றுடல் மீது அந்நியர்கள் பார்வைப்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சியே தம்மை இரவில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று இறுதி சாசனம் செய்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடமிருந்தே ஜனாஸா பெட்டி பழக்கம் துவங்கியது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் ஒரு அழைப்பாளர் வந்து ஒன்று கூடியிருப்பவர்களே! ஃபாத்திமா (ரலி) அவர்கள் தற்போது சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை கடக்க உள்ளார்கள். (அந்நியர்களின் பார்வை தம்மீது படுவதை அவர் விரும்புவதில்லை) அதனால் உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்" என்று கூறுவார். அறிவிப்பாளர்:- அலீ (ரலி)அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால், ஹாகிம், தப்ரானீ பிற ஆடவர்களின் கண்களை விட்டும் மறைந்து வாழ்வதே பெண்களுக்கு கண்ணியம் என்றெண்ணி வாழ்ந்த ஃபாத்திமா (ரலி)அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் விதமாக இவ்வாறு அழைக்கக்கூடிய ஒரு அழைப்பாளரை நியமித்துள்ளான். ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா? அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள் நூல்:- பைஹகீ ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் மார்க்கம் பயில வரும் மாணவர்களுக்கு திரைக்கு பின்னாலிருந்தே மார்க்க சட்டத் திட்டங்களை போதித்து வந்தார்கள். ஒருமுறை சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "வாருங்கள் கஃபாவின் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள 'ஹஜ்ருல் அஸ்வது' கல்லை முத்தமிட்டு வருவோம்" எனக்கூறி அழைத்தனர். அதற்கு அன்னையவர்கள் ஆண்களின் நெருசலில் முட்டிமோதிக் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை என்றார்கள். ஜன நெருசலில் ஒருவர் ஒருவரை முட்டிமோதிக் கொண்டு உடலோடு உடல் உரசிக்கொண்டு செல்வது வெட்கமின்மையே ஆகும். இதனை தவிர்ந்து கொள்ள வேண்டும். வெட்கம் என்பது ஆண்களுக்கு அழகு. பெண்களுக்கு பேரழகு. வெட்கம் போனால் மானம் போய்விடும். இன்று அநாகரிகம் தலைவிரித்தாடுவதற்கும், கேவலமான உறவுகள் ஊக்கம் பெறுவதற்கும் வெட்கமின்மையே காரணமாகும். பலரும் பார்க்கிறார்களே என்ற கூச்சம் கொஞ்சமும் இல்லாமல் பொது இடங்களிலியே பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை இன்றைய இளைய தலைமுறையினர் பெருமையாகக் கருதுகின்றனர். அதிலும் இளம் பெண்களிடம் பெண்களுக்கே உரிய கூச்சம் எடுபட்டுப்போய் பல நாட்களாகின்றன. நண்பர்கள் என்ற பெயரில் அந்நிய ஆண்களுடன் ஆடிப்பாடி கூடி கூத்தடிப்பதும், மது அருந்துவதும் தான் புரட்சி பெண்ணுக்கு இலக்கணம் என அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இறுதியில் காமுகர்களிடம் கற்பை இழப்பதுக்கூட அவர்களுக்கு புரட்சி தான். ஆபாசங்கள் (நபிப்பட்டம் கிடைக்கப்பெற்ற ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்துப்போய் இருந்தார்கள் ) ஒருநாள் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் நாயகமே! உங்களிடம் (இறைவேதத்தைக்கொண்டு வரக்கூடிய) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும்போது என்னிடம் கூறுங்கள் என்றார். அவ்வாறே ஒருநாள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தபோது அண்ணலார் கதீஜா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அன்னையார் அண்ணலாரை தம் வலது தொடையில் அமரச் சொன்னார்கள். இப்போது ஜிப்ரீல் (அலை) இருக்கின்றாரா? என்று அன்னையார் வினவ, அண்ணலார் ஆம்! என்று பதிலளித்தார்கள். மீண்டும் அன்னையார் அண்ணலாரை தம் இடது தொடையில் அமரச் சொன்னார்கள். இப்போது ஜிப்ரீல் (அலை) இருக்கின்றாரா? என்று அன்னையார் வினவ, அண்ணலார் ஆம்! என்று பதிலளித்தார்கள். பிறகு அன்னையார் தம் முகத்திரையையும், நெஞ்சு ஆடையையும் (மாராப்பையும்) விலக்கிவிட்டு இப்போது ஜிப்ரீல் (அலை) இருக்கின்றாரா? என்று வினவ, அண்ணலார் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நிச்சயமாக இவர் வானவர்தான். ஏனென்றால் வானவர்கள் பெண்கள் அலங்கோலமாக இருப்பதை காண வெட்கப்பட்டு அவ்விடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். ஷைத்தான் தான் பெண்கள் அலங்கோலமாக இருப்பதை காண விரும்புவான் என்று கூறினார். நூல்:- உஸுதுல் ஙாபா, அல்பிதாயா வந்நிஹாயா இன்று வெட்க உணர்வு குறைந்து போய் ஆபாசங்கள் அதிமானதற்கு டி.வி., கணினி, கைப்பேசி, ஆகியவற்றுக்கும் பெரும் பங்குண்டு. சினிமா படங்கள், டி.வி.யில் வரும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இவை அனைத்தும் கதையைவிட சதைக்கு முக்கயத்துவம் தருபவையாக இருக்கிறது. சோப், பிளேடு, ஷேவிங் க்ரீம், சின்னச்சின்ன பொருட்களின் விளம்பரங்களில்கூட பெண்களை பாலியல் பண்டமாக பாவித்து அவர்களை அருவருக்கத்தக்க அறை நிர்வாணக் கோலமாகவே அடிக்கடி காட்டப்படுகிறது. டி.வி. யின் பாதிப்பால் சிறுவ சிறுமிகளிடம் வீட்டை விட்டு ஓடிப்போகும் மனநிலை சமீப காலமாக பெருகி வருகிறது. வண்ணத்திரை, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் பெரும்பாலும் பண்பாட்டு சிதைவையும், மரியாதை குலைவையும், பாலியல் ஒழுக்க மீறல் பரவலையுமே மையமாகக் கொண்டுள்ளன. இணைய தளங்களில் உள்ள அருவருப்பான ஆபாசக் காட்சிகளை கணினி, கைப்பேசிகள் மூலமாக பார்ப்பதும் அதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் சாதாரணமாகி வருகிறது. பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் சரிதமாக சேர்ந்து சினிமா மற்றும் டி.வி. வரும் பிற நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அதில் ஏதேனும் ஆபாசக் காட்சிகள் வந்து விட்டால் ஆரம்பத்தில் அது சற்று அருவருப்பாக நமக்கு தோன்றும். வெட்க உணர்வால் நம்மையும் அறியாமல் அப்போது நமது உடல் நெளியும். ஆனால் அதுவே தொடர்நிலையாக ஆகுமானால் அந்த அருவருப்பான காட்சிகளைப் பார்த்து பார்த்து பழகிப்போய் அந்த அருவருப்பான காட்சிகளை ரசிக்கும்படியாக மனநிலை மாறிவிடும். ஆரம்பித்தில் தவறாக தெரிந்தது இப்போது தெரியவில்லையெனில் நம்மிடமுள்ள வெட்க உணர்வு மங்கிக்கொண்டே வருகிறது என்று விளங்க வேண்டும். சினிமாவிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் அரைகுறை ஆடைகளுடன் வலம் வரும் நடிகைகளை ரசிப்பதும் கண்டு களிப்பதும், அத்தகைய காட்சிகளை மனைவி-மக்களுடன் சகிதமாக சேர்ந்து கண்டுகளிப்பதும் வெட்கமின்மையின் வெளிப்பாடு தானே! யோசிக்க வேண்டாமா? நமது குடும்பத்தினர் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்ற ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நாமே அனுமதிப்பது மாபெரும் பாவச்செயலாகும். மக்கள் தன்னை எப்படி பார்த்துவிடக்கூடாது என்று எண்ணுவோமோ, அதை தனிமையிலும் தவிர்த்துக் கொள்வதுதான் வெட்கம் ஆகும். கல்வி கற்கும்போது அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்பட மாட்டான். திருக்குர்ஆன்:-33:53 உம்மு சல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாயகமே! சத்தியத்தை சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா? என்று வினவினார். அதற்கு அண்ணலார் (நஅம் இதா ரஅதில் மாஅ ) "ஆம்! அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமை தான்)" என்று பதிலளித்தார்கள். நூல்:-புகாரீ-6121, அபூதாவூத்-205, நசாயீ-196 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அஸ்மா பின்த் ஷகல் (ரலி) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் மாதவிடாயிலிருந்து (நீங்கிக் கொள்ள) தாம் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று வினவினார். அண்ணலார் "அப்பெண்ணுக்கு குளிக்கும் முறையை விளக்கினார்கள். பிறகு கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக் கொள்!" என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் அதை வைத்து நான் எப்படி தூய்மைப்படுத்த வேண்டும்? என்று (மீண்டும்) வினவினார். அண்ணலார் (வெட்கப்பட்டவாறு சுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் தூய்மையானவன் அதனால் தூய்மைப்படுத்திக் கொள்! என்று (மீண்டும்) கூறினார்கள். உடனே நான் "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள்!" என்று பிறர் காதில் விழாதவாறு இதை இரகசியமாக கூறினேன். மேலும் ஆயிஷா (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். பெண்களிலேயே மிகச்சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்கு தடையாக இருந்ததில்லை. நூல்:- முஸ்லிம்-552 "வெட்கப்பட்டவன் கல்வி கற்க மாட்டான்" என்று எச்சரிக்கிறது ஒரு நபிமொழி. மாதவிடாய், பிள்ளைப்பேறு தீட்டு போன்ற பெண்களின் அந்தரங்க சட்டங்கள் அதிகமானவற்றை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலமாக ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு போதித்துள்ளார்கள். அன்னையவர்கள் அன்று அதில் வெட்கப்பட்டு போதிக்காமல் விட்டிருந்தால் இன்று நம் நிலை என்னவாகும்? குறிப்பாக அந்தரங்க விஷயங்களில் உள்ள மார்க்கச் சட்டங்களை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் வெட்கப்படக்கூடாது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக்கொள்ள மாட்டர். நூல்:- புகாரீ- 130 நம்மில் பலருக்கு திருக்குர்ஆன் ஓத தெரிவதில்லை. இத்தகையவர்களிடம் நீங்கள் திருக்குர்ஆன் ஓதிக் கற்றுக்கொள்ள வேண்டியது தானே என்று வினவினால், "இந்த வயசுல போயி குர்ஆனை கத்துத்தாங்கன்னு யார்ட்டயாவது சொல்ல வெட்காமாயிருக்கு" என்பார்கள் ஆனால் இந்த வயசிலும் கணினி, கைப்பேசி போன்ற உலக விஷயங்களை கற்றுக் கொள்ள வெட்கப்பட மாட்டார்கள். தயக்கமின்றி ஒருமுறை மாபெரும் அறிஞரான இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் 48 கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றில் 32 கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்று பதில் கூறினார்கள். மற்றொரு முறை 40 கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் 5 கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கூறினார்கள். நூல்:- அஸ்ஸுஹ்து இமாம் அஹ்மது பின் ஹம்பல் நம்மிடம் ஏதேனும் ஒன்றை பற்றி வினவப்பட்டால் நமக்கு தெரிந்தால் அதை பற்றி விவரிக்கலாம். தெரியவில்லை என்றால் எனக்கு அதைப்பற்றிய ஞானம் இல்லை. விரும்பினால் பிறரிடம் கேட்டு சொல்கிறேன் என்று உடனடியாக தயக்கமின்றி சொல்லிவிட வேண்டும். இதில் வெட்கப்படக் கூடாது. தெரியாததை தெரிந்தது என்று பொய் சொல்லி, குருட்டுத்தனமாக ஏதேனும் ஒன்றை பதிலாக சொல்லி சொதப்பக்கூடாது. இதனால் சில நேரங்களில் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அல்லது அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான். திருக்குர்ஆன்:- 2:26 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஃபஇன்னல்லாஹ லா யஸ்தஹ்யீ மினல் ஹக்கி) "நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நூல்:- திர்மிதீ-1084 சொல்லப்படும் கருத்துக்களைத் தெளிவுப்படுத்துவதற்காக திருக்குர்ஆனில் பல இடங்களில் சிலந்தி, ஈ, கொசு, போன்றவை உதாரணங்களாக தரப்பட்டுள்ளன. அவற்றை சுட்டிக்காட்டி இறைமறுப்பாளர்கள் "இத்தகைய அற்ப பூச்சிகளை உதாரணங்களாக தரப்பட்டுள்ளனவே! இது எப்படி இறைவனின் வாக்காக இருக்க முடியும்? என்று ஆட்சேபித்தனர். அவர்களுக்கு பதிலாகவே மேற்காணும் திருவசனம் அருளப்பட்டது. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் அல்லாஹ் வெட்கப்படுவதே இல்லை. இதேபோல் முஸ்லிம்கள் உண்மை எது, பொய் எது என்று நிரூபிப்பதில் வெட்கப்படவே கூடாது. இதில் எதிர்படும் எதிர்விளைவுகளைக் கண்டு அஞ்சவும் கூடாது. இஸ்லாமிய முறைப்படி வாழவோ, தன்னை ஒரு இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவோ, தொப்பி அணியவோ, சுன்னதான முறைப்படி தாடி வைக்கவோ, உடலை முழுமையாக மூடும்படியான புர்கா அணியவோ வெட்கப்படக்கூடாது. எதிரிகளை கண்டு அஞ்சுவது வெட்கமல்ல. அது கோழைத்தனம். பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவில்லாமல் பின் வாங்குவது வெட்கமல்ல. அது பேடித்தனம். உரக்கப்பேசவேண்டிய இடத்தில் பேசாமல், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படாமல், கண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்டிக்காமல் இருப்பதெல்லாம் வெட்கமல்ல. இவையெல்லாம் ஏமாளித்தனம். அல்லாஹுதஆலா நம்மை வெட்கத்தை முறையாக பேணும் நற்பண்பாளர்களாக ஆக்குவானாக! ஆமீன்! மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, நீலாங்கரை, சென்னை.

Tuesday, 11 July 2023

பன்றியின் இறைச்சி ஹராம் ஏன்?

குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை : ஏன் பன்றியை உண்ண குர்ஆன் தடை செய்துள்ளது தெரியுமா ? பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும் தான் பன்றி தடை செய்யப் பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை. இது தான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடை யில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப் படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப் பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ப தற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர். 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது. சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது. மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம். இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது. பன்றியின் இறைச்சியில் மனித னுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர். இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ 2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ 5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) – இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். قُل لَّاۤ اَجِدُ فِىْ مَاۤ اُوْحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ‌‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ 6:145. (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் – (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَ الدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ 16:115. (நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் – ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Sunday, 9 July 2023

ஜனாஸா_தொழுகை_முறை

#ஜனாஸா_தொழுகை_முறை
:- #இமாம்_நிற்க_வேண்டிய_இடம்:- 🌟இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும். நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640 🌟இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும். நூல்: புகாரி 332, 1331, 1332 #தக்பீர்_கூறுதல்:- ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும். #நான்கு_தடவை_தக்பீர்_கூறுதல்:- நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள். நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879 #தக்பீர்களுக்கு_இடையே_ஓத_வேண்டியவை:- #முதல்_தக்பீருக்குப்_பின்... முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும். நூல்: புகாரி 1335 இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'இது நபிவழியும், உண்மையும் ஆகும்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் நூல்: நஸயீ 1961 #இரண்டாவது_தக்பீருக்குப்_பின்... இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார். நூல்: பைஹகி (4/39) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். #மூன்றாவது_நான்காவது_தக்பீருக்குப்_பின்:- மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம். அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம். #நபிகள்_நாயகம்_ஸல்_அவர்கள்_கற்றுத்_தந்த_துஆக்கள்:- ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) பின்வருமாறு துஆச் செய்தனர். اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الابْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ مِنْ عَذَابِ النَّارِ அல்லாஹூம்மஃபிர்லஹூ வர்ஹம்ஹூ வஆஃபிஹி வஃபு அன்ஹூ வஅக்ரிம் நுஸீலுஹூ வவஸ்ஸிஃ மத்கலஹூ வக்ஸிலீஹூ பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்தி வநக்கிஹி மின்ஹதாயாஹூ கமாநக்கைத்தஸ்ஸவ்புல் அப்யழு மினத்தனஸி வஅப்தில்ஹூ தாரன் ஹைரன் மின்தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஹைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹூல் ஜன்னத வஅஇத்ஹூமின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.’ பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக! அந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன். [அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்:முஸ்லிம் 1756, 1757)

XII std Arabic Public Question March 2023

XII std Arabic Public Question March 2023 https://drive.google.com/file/d/1_7Wlbqa9IF3GC3_AhVFypTsJ_d5-5IiU/view?usp=sharing